சென்னை உள்பட நான்கு மாவட்டத்தினர் சேலம் வருவதற்கு இ பாஸ் வழங்குவது தற்காலிமாக நிறுத்தம்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அந்த மாவட்டங்களில் இருந்து சேலம் வருவதற்கு இ பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
Recommended Video
திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சிக்கி தவிப்போருக்கு சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நுழைவதற்கும், தமிழகத்திற்குள் வெவ்வெறு மாவட்டங்களுக்கு செல்வதற்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சென்னையில் இருந்து , தனி நபராகவும், குழுவாகவும் சாலை மார்க்கமாக செல்ல தினமும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கிறார்கள் ஆனால் சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இ பாஸ் வழங்க மற்ற மாவட்ட நிர்வாகங்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இ-பாஸ் கொடுக்கப்பட்டால் செல்வோரின் செல்போன் நம்பர், கார் நம்பர், வீட்டுமுகவரி பதிவு செய்யப்படுதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றால் அவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து பரிசோதனை செய்கிறார்கள்.. இதில், கொரோனா தொற்று இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்கிறார்கள். தொற்று இல்லை என்றாலும் 14 நாட்கள் அவரை வீட்டில் இருந்தப்படியே தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாளாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து முறையாக செல்வதற்கு பல்வேறு மாவட்டத்தினர் ஏராளமானோர் விண்ணப்பிக்கும நிலையில் பாஸ் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அந்த மாவட்டங்களில் இருந்து சேலம் வருவதற்கு இ பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மரணம் மற்றும் மருத்துவ அவரச நிலைக்கு மட்டுமே தரப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications