கமலை விமர்சித்தது முதல் கார் கண்ணாடியை உடைத்தது வரை.. தாடி பாலாஜி மனைவி நித்யாவின் சர்ச்சைகள்
கமல்ஹாசன் தொடங்கி தற்போது எதிர் வீட்டு கார் கண்ணாடி உடைப்பு வரை தாடி பாலாஜி மனைவி நித்யாவின் சர்ச்சைகள் ஏராளம்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் மிகவும் மோசமான கேரக்டர் என்றும் என் வாயை கிளறாதீர்கள் என்றும் தாடி பாலாஜி மனைவி நித்யா கூறியிருந்தது முதல் தற்போது எதிர் வீட்டின் கார் கண்ணாடியை உடைத்தது வரை சர்ச்சைகள் ஏராளம்.
காமெடி நடிகரான தாடி பாலாஜி நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 15 வயதில் போஷிகா என்ற மகள் இருந்து வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் நித்யாவுக்கும் தாடி பாலாஜிக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இது நாளடைவில் இருவரிடையே பெரும் விரிசலை தந்தது. நித்யா போலீஸ்காரர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தாடி பாலாஜி பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பட்டமாக கூறியிருந்தார்.

குடும்பச் சண்டை
இப்படி குடும்ப சண்டை நீண்டு கொண்டிருக்கையில் இவர்களை சேர்த்து வைக்க நண்பர்கள் பலர் முயற்சி செய்து வருகிறார்கள். இதனால் சமாதானம் ஆகும் இவர்கள் மீண்டும் சண்டையிட்டு கொள்கிறார்கள். மகள் போஷிகா தாயுடன் இருந்து வருகிறார். பாலாஜி தனியே வசித்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 2
இந்த நிலையில்தான் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தம்பதி இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததே இவர்களை சேர்த்து வைக்கத்தான் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாடி பாலாஜி, மகள் போஷிகா குறித்து கண் கலங்க வைக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

நித்யா பதிலடி
இதற்கு நித்யா பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் நித்யாவிடம் இருந்து தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆணையத்தில் தாடி பாலாஜி புகார் கொடுத்துள்ளார். அதில் நித்யாவின் பராமரிப்பில் இருக்கும் மகளை அவர் சரியாக பள்ளிக்கு அனுப்புவதில்லை என புகார் எழுந்துள்ளது. வயதுக்கு வந்த மகளை சமூகவலைதளங்களில் ஆட விடுகிறார். இந்த வீடியோவின் கீழ் வரும் கமென்ட்டுகளை ஒரு தகப்பனாக தன்னால் படிக்க முடியவில்லை என தாடி பாலாஜி தெரிவித்திருந்தார். இதனால் மகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடும்படி கேட்டிருந்தார்.

யூடியூப் சேனல்
இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனலுக்கு கடந்த ஆண்டு நித்யா பேட்டி கொடுத்த போது, பிக்பாஸ் கமல் அறிவுறுத்தல் குறித்து கேட்டிருந்தார்கள். அதற்கு நித்யா, யாரு அவரா (கமல்ஹாசனா), என் வாயை கிளறாதீங்க. கமல் குறித்து என்னிடம் நிறைய கன்டென்ட் இருக்கிறது. அவரை போன்றதொரு வொர்ஸ்ட் கேரக்டரை நான் என் வாழ்வில் பார்த்ததே இல்லை என பகீர் தகவலை தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதையடுத்து தனது யூடியூபில் மகளுடன் லைவில் வந்திருந்தார். அப்போது மகளே தனது அப்பா மீது வெறுப்புணர்வில்தான் இருக்கிறார் என்பதை காட்டினார்.

சர்ச்சைக்கு மேல் சர்ச்சை
இப்படி சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சையில் சிக்கிய நித்யா, தற்போது மீண்டுமொரு பிரச்சினையில் சிக்கியுள்ளார். மாதவரம் சாஸ்திரி நகர் பகுதியில் மகளுடன் நித்யா வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு எதிரே ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவர் வசித்து வருகிறார். அடிக்கடி நித்யாவுக்கும் மணிக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். அதனால் மணியை பழிவாங்க நினைத்து நடுராத்திரியில் யாரும் இல்லாத நேரத்தில் மணி வீட்டின் மாடியில் கல் எறிந்துள்ளார். அந்த கல் மணி மீது பட்டு பின்னர் வீட்டிலிருந்த கார் மீதும் பட்டு கண்ணாடி உடைந்துவிட்டது. இதையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது நித்யாதான் கல்லை வீசியுள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து மாதவரம் போலீஸில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் நித்யாவை கைது செய்த போலீஸார் அவரை எச்சரித்து ஜாமீனில் வெளியே விட்டனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications