மீண்டும் அதகளம்! கடன் தகராறில் இளைஞரை தாக்கியதாக தாடி பாலாஜி மனைவி நித்யா மீது போலீஸில் புகார்
சென்னை: கொடுக்கல் வாங்கல் தகராறில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது இளைஞர் ஒருவர் பரபரப்பு புகாரை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு விபிசி நகரைச் சேர்ந்தவர் கலைச் செல்வன் (29). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களளுக்கு முன்பு கலைச்செல்வன் புதிதாக தொழில் தொடங்க எண்ணினார்.

இதற்காக மாதவரம் சாஸ்திரி நகரில் வசித்து வரும் பிரபல தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ 94 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார்.
அதில் ரூ 52 ஆயிரத்தை திரும்பக் கொடுத்துவிட்டு பாக்கி 42 ஆயிரம் ரூபாயைத் திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நடிகரின் மனைவி நித்யாவுக்கும் கலைச் செல்வனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டதாக தெரிகிறது.
அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கலைச் செல்வன் வீடு திரும்பினார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் மாதவரம் போலீஸார் நேரில் சென்று இருவரிடம் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து நித்யாவிடமும் கலைச்செல்வனிடமும் தனித்தனியே போலீஸில் புகார் அளித்தனர். அவர்கள் இருவரது புகாரையும் பெற்றுக் கொண்ட போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நித்யா தான் வசிக்கும் பகுதியில் எதிர்வீட்டில் ஒரு ஆசிரியரின் கார் கண்ணாடியை உடைத்தாக மாதவரம் போலீஸ் நிலையத்தில் புகார் எழுந்தது. நித்யாவும் தாடி பாலாஜியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இருவரையும் சேர்த்து வைக்க பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது பலனளிக்கவில்லை இந்த நிலையில் நித்யாவிடம் இருக்கும் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு தாடி பாலாஜி சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். நித்யா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications