"பொங்கலோ பொங்கல்”.. புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு தமிழர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்!
சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து இல்லங்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. புத்தாடை உடுத்தி புதுப்பானையில் பொங்கலிட்டு தமிழர்கள் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், பயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவர்களின் பண்டிகையாகவும், தமிழர் திருநாளாகவும் அறியப்படும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. ஜனவரி 16ஆம் தேதியான நாளை மாட்டு பொங்கலும், ஜனவரி 17ஆம் தேதி சனிக்கிழமை காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு மக்கள் தங்கள் இல்லங்களை சுத்தப்படுத்தி வண்ணப்பூச்சுகளை அடித்து அழகுப்படுத்தினர். ஜனவரி 14 ஆம் தேதியான நேற்று போகி பண்டிகையுடன் பொங்கல் திருவிழா தொடங்கியது.
தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். பால் பொங்கி வரும்போது "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டும், குலவையிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தைத் திருநாள் முதல் நாளில் பொங்கல் வைக்க, இன்றைய நாளில் காலை 7:45 - 8:45 மணி வரையிலும், காலை 10.35 மணி முதல் 11.30 மணி வரையிலும் உகந்த நேரம். இந்த் நேரத்தில் பொங்கல் வைத்து வீட்டில் பூஜை செய்து வழிபடலாம். சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் கொண்டவர்கள், காலை 6 மணிக்கு முன் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்குப் படைத்து வழிபட வேண்டும். சூரிய பொங்கல் வைக்க நல்ல நேரம் பார்க்கத் தேவையில்லை.
பொங்கலை முன்னிட்டு சென்னை, பெங்களூர், கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பேருந்து, ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பி குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டது. அதேபோல் வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள் தவிர்த்து பொங்கல் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது. இந்த பொங்கலுக்கு ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை 5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டுமென பலரும் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications