சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தளி தொகுதி.. ராமசந்திரன் vs நாகேஷ்குமார்.. வெல்லும் முனைப்பில் பாஜக-சிபிஎம்.. களநிலவரம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவிற்கு செட் ஆகாமல் உள்ள தொகுதிகளில் ஒன்று தளி. கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா எல்லையை ஒட்டிய இந்த தொகுதியில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே ஆகாத தொகுதி. இதில் அதிமுக ஒருமுறை கூட வென்றது இல்லை. திமுக ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. இந்த தளி தொகுதியை அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவும், திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட்டும் களம் இறங்கி உள்ளன.

தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தளி (தனி) சட்டமன்ற தொகுதி லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு இங்கு குளிர் காணப்படும். மலைகள் சூழ்ந்த பகுதியாகும் இங்கு விவசாய நிலங்களாக ரோஜா தோட்டங்கள் அதிகமாக உள்ளன.

தக்காளி, பீன்ஸ் கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் பயிரிடப்படுகின்றன. குடகு மலையில் உற்பத்தி யாகும் காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழையும் பிலிகுண்டுலு தளி தொகுதியில்தான் உள்ளது.

கட்டமைப்புகள் இல்லை

கட்டமைப்புகள் இல்லை

ஓசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ள அதேநேரம் அதன் அருகே உள்ள தளி தொகுதியில் அடிப்படை வசதிகள் பெரிய அளவில் இல்லை. கிராமங்கள் பல காட்டுப்பகுதியில் உள்ளதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பெரிதாக போய்சேரவில்லை இந்த தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, என 4 மொழிகள் பேசும் வாக்காளர்கள் நிறைந்துள்ளனர்.

 கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி

கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி

1977-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னபாக, இது உத்தனப்பள்ளி தொகுதி. 1977-க்குப் பிறகு, உத்தனப்பள்ளி தொகுதி நீக்கப்பட்டது. தளி தொகுதியானது. 1977 முதல் தற்போது தேர்தல் நடைபெற்ற 2016&ம் ஆண்டு வரையில் பார்த்தால் இங்கு காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும் ஜனதா கட்சி 1 முறையும் பா.ஜனதா கட்சி வேட்பாளர் 1 முறையும், திமுக ஒருமுறையும் சுயேட்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். தளி சட்டமன்றத் தொகுதியில் ரெட்டி, நாயுடு, வன்னியர்கள், ஒக்கலிகா, யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதிதிராவிடர்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.

தொகுதி நிலவரம்

தொகுதி நிலவரம்

மலை கிராமங்களில் முக்கியமான பிரச்சனை உயர்கல்வி படிக்க இயலாமை நிலவுகிறது. மேற்படிப்பிற்காக கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. - இளம் வயது திருமணங்கள். இங்கு அதிக அளவில் நடப்பதாக புகார் அதிகமாக உள்ளது இங்கு தான். யானைகள் மற்றும் வன விலங்குகள் தொந்தரவுகளை விவசாயிகள் அதிகம் சந்திக்கிறார்கள். தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மருத்துவமனையாக உயர்த்த வேண்டும். மலைப்பகுதியில் சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

பாஜக தீவிரம்

பாஜக தீவிரம்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் நாகேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் கடந்த முறை வென்ற டி. ராமச்சந்திரன் களம் காண்கிறார். மநீம கூட்டணியில் ஐ.ஜே.கே. சார்பில் அசோக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மேரி செல்வராணி, அமமுக கூட்டணியில் கோகுலம் மக்கள் கட்சி சார்பில் எம்.வி. சேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேசிய கட்சிகளே இங்கு இதுவரை வென்றுள்ளன. மூன்றாவது முறையாக வெல்லும் முனைப்பில் சிபிஎம் வேட்பாளர் ராமசந்திரனும், எப்படியும் இங்கு வென்று காட்ட வேண்டும் என்று பாஜகவின் நாகேஷ்குமாரும் களத்தில் உள்ளனர்.

English summary
Thali constituency Ramachandran vs Nageshkumar .. BJP-CPM on heavy fight for victory .. What is the field situation?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X