பெண்கள்தான் தாலி கட்டிக்கணுமா? மாப்பிள்ளை அவருக்கே தாலி கட்டிட்டாரு.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
சென்னை: இன்று திமுக சார்பில் வடசென்னையில் நடைபெற்ற 48 ஜோடிகள் திருமண விழாவில் கலகலப்பாக பேசினார் தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். "திருமண பதற்றத்தில் ஒரு மணமகன் தனக்கு தானே தாலி கட்டிக் கொள்ள முயற்சி செய்தார். இது தவறு கிடையாது. பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை." என்று பேசினார் உதயநிதி.
சென்னை ஆர்.கே.நகரில் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், 'எளியோர் எழுச்சி நாள்' என்ற பெயரில் இன்று 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில், 48 மணமக்களுக்கும் தலா ரூ. 25 ஆயிரம் மொய், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் மிக்சி என 30 வகையான பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகளும் வழங்கப்பட்டன.

இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கின்ற புது மணத்தம்பதிகள், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, நல்ல நண்பர்களாக, இணையர்களாக வாழ்கையை வாழ வேண்டும். இணையர் அனைவரும் பெரியாரும் - பகுத்தறிவும் போல, அண்ணாவும் - மாநில சுயாட்சியும் போல, கலைஞரும் - கழகமும் போல, தலைவர் அவர்களும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தினார் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது சூர்யகுமார் - குணவதி ஜோடிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது திருமண பரபரப்பில் இருந்த மணமகளின் தாயார் துணை முதலமைச்சரிடம் இருந்து தாலியை பெற்று மணமகனுக்குப் பதில் தானே மணமகளுக்குத் தாலி கட்ட முயன்றார். இதைப் பார்த்து ஷாக் ஆன துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "என்னம்மா, நீங்க தாலி கட்டுறீங்க" எனக் கேட்டு சிரித்தார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாகப் பேசினார். உதயநிதி பேசுகையில், "இன்று அண்ணன் ஆர்டி சேகர் ஏற்பாட்டில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. எனக்கு 48 வயதாகிவிட்டது என மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.
இங்கு நடைபெற்றுள்ள சில திருமணங்கள் காதல் திருமணங்கள் என்று சொன்னார்கள். இதற்காகவே ஆர்டி சேகர் அண்ணனை பாராட்ட வேண்டும். சரி காதல் பண்ணிட்டீங்க.. திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்துவிட்டோம். இனிமேல் தான் நீங்கள் அதிகமாக காதலிக்க வேண்டும். ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து, நண்பர்களாக இருந்து வாழ வேண்டும்.
ஒரு மணமகன் 5 முடிச்சுகளைப் போட்டார். “என்னப்பா கட்டிக்கிட்டே இருக்க..?” எனக் கேட்டேன். ஸ்ட்ராங்கா கட்டணும்ணே என்றார். திருமண பதற்றத்திலா, அவசரத்திலா எனத் தெரியவில்லை. இங்கு ஒரு சில மணமகன்கள் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டார்கள். ஒரு மணமகன் தனக்கு தானே தாலி கட்டிக் கொள்ள முயற்சி செய்தார். இது தவறு கிடையாது. பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. பெரியார் சொன்னதுதான்.
ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கும்போது மணப்பெண் கண் கலங்கினார். "இப்பதானம்மா கல்யாணம் ஆச்சு.. ஏன்மா கண் கலங்குற என்று கேட்டேன். " உடனே கலாநிதி வீராசாமி, "இதுதான் இந்தப் பெண் அழும் கடைசி நாள்.. இனி அந்தப் பையன் தான் அழப்போகிறார்" என்று நகைச்சுவையாகச் சொன்னார்." என்று கலகலப்பாகப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
காதல் திருமண சர்ச்சை.. திருமணப்பதிவின் போது பெற்றோர் பங்கேற்பு அவசியம்.. வன்னியர் சங்கம் வலியுறுத்தல்











Click it and Unblock the Notifications