கலைஞரின் "பாசப்பறவைகள்"! ஈன்றபொழுதில் பெரிதுவக்கும்! தங்கத்தை நினைத்து தமிழச்சியின் "பேசும் படம்"
சென்னை: தனது சகோதரர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை அவருடைய சகோதரியும் திமுக எம்பியுமான தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டியுள்ளார்.
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை நேற்றைய தினம் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். இவர் நிதித் துறை அமைச்சராக தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தாக்கல் செய்தது துணை நிலை பட்ஜெட்டாகும். நேற்று அவர் தாக்கல் செய்த முழு பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலினே பாராட்டியிருந்தார்.
அவர் கூறியிருப்பதாவது: கனிவான பொருளாதார சமநிலை அறிக்கையை தயாரித்துள்ளார் தங்கம் தென்னரசு. தமிழக அரசுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் மாபெரும் கடமையை மிகச் சரியாக ஆற்றியுள்ளார். நனவாகப் போகும் கனவுகள் என ஸ்டாலின் பாராட்டியிருந்தார். தங்கம் தென்னரசு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.
அவருடைய குட் வில் புக்கில் இடம்பெற்றிருந்தார். அதே நிலையே முதல்வர் ஸ்டாலினுடனும் அவர் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் சிறப்பான வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ததாக பூரித்து போயுள்ளார் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன். இதையடுத்து தங்கத்தை நேரில் சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அப்போது தனது தாயின் புகைப்படத்தின் அருகே இருவரும் நின்றிருக்கிறார்கள். தமிழச்சி தனது வாழ்த்து பதிவில் ஈன்றபொழுதில் பெரிதுவக்கும்... என தொடங்கும் திருக்குறளை மேற்கோள்காட்டியுள்ளார்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
இந்த குறள் 69ஆவது குறளாகும். அதாவது தனது மகனைச் சான்றாளன் நல்ல குணமுடையவன் என பலரும் போற்றுவதைக் கேள்விப்பட்ட தாய், அவனைப் பெற்ற காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள் என்பதுதான் இந்த குறளின் பொருளாகும். அந்த புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறது, தமிழச்சியின் தாய் புகைப்படத்தின் அருகே இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கவிஞர், சமூக ஆர்வலர். இவர் திமுக சார்பில் தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக உள்ளார். இவரது தந்தை தங்கப்பாண்டியன் முன்னாள் அமைச்சராவார். இவரது தாய் ராஜாமணி அம்மாள். இவரது சகோதரர் தற்போதைய அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் ராஜாமணி கடந்த 2020 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். தமிழச்சி தங்கபாண்டியனும் தங்கம் தென்னரசுவும் ஆண்டுதோறும் தனது தாய் தந்தையரின் நினைவு நாள் அன்று உருக்கமான கவிதைகளை சமூகவலைதளங்களில் பதிவிடுவர். அந்த வகையில் இன்று தாய் இல்லாவிட்டாலும் தாய் ஸ்தானத்தில் இருந்து தமிழச்சி தங்கபாண்டியன் பெருமைப்படுகிறார் என்பதாகவே அந்த புகைப்படம் உள்ளது. ஒரு ஆண் மகனுக்கு ஒரு கட்டத்தில் மனைவியும் உடன் பிறந்தவர்களும் தாய் ஸ்தானம்தானே.
இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டி நெகிழ்ந்துள்ளனர். அதிலும் தாய் சிரிப்பதை போன்றே தமிழச்சியும் சிரித்தபடியே நின்றிருப்பது உண்மையில் அவர் தனது சகோதரரை நினைத்து எத்தனை பெருமையடைந்திருப்பார் என்பது நன்றாகவே தெரிகிறது என்கிறார்கள். இன்னும் சிலர் இப்படியே இருவரும் ஒற்றுமையுடன் பணிச் சிறக்க வாழ்த்துகள் என்கிறார்கள். அம்மாவின் ஆசியுடன் இருவரும் நலம் பெறுக என்கிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications