முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை! சிறைநிரப்பும் போராட்டம்! தமிமுன் அன்சாரியின் புதுத் திட்டம்!
சென்னை: முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி சிறைநிரப்பும் போராட்டம் நடத்தும் திட்டத்தில் இருக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு செயற்குழு குழு கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசித்து அவர், இஸ்லாமிய இளைஞர்களை பெருமளவில் திரட்டி இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பது பற்றி ஆலோசித்திருக்கிறார்.

தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளை கடந்து வாடும் ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தையும் தமிமுன் அன்சாரி தனது கட்சி செயற்குழுவில் கொண்டு வந்துள்ளார்.
அதேபோல் இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளின் முன்பு 'சிறை நிரப்பும் போராட்டம்' நடத்துவது என்றும், இதில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவெடுத்துள்ளார்.
முதல் கட்டமாக எதிர்வரும் ஜூலை 9 அன்று நெல்லை - பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு மாலை 4 மணிக்கு நடத்துவது என போராட்டம் நடத்துவது என்றும் அதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறை முன்பு 18.08.2023 அன்றும், சேலம் மத்திய சிறை முன்பு 07.09.2023 அன்றும், கடலூர் மத்திய சிறை முன்பு 07.10.2023 அன்றும் சென்னை - புழல், கோவை, திருச்சி, வேலூர், ஆகிய சிறைச்சாலைகள் முன்பு அடுத்தடுத்து போராட்டம் நடத்துவது எனவும் திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications