திமுக அரசின் ”அம்மன் மாநாடு”-முதலில் கோவில்களில் ஜாதிபாகுபாடு ஒழியனுமே- பெரியாரிஸ்டுகள் கொந்தளிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு முருகன் மாநாடு போல அம்மன் மாநாட்டை நடத்த இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு நடத்தி முடித்த முருகன் மாநாட்டை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் பெரியாரிஸ்டுகள், கோவில்களில் ஜாதிபாகுபாடுகளை ஒழிக்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை பழநியில் 2 நாட்கள் முருகன் மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 'இந்துத்துவா' கோட்பாட்டை பிரசாரம் செய்வதாக இருக்கிறது என கூறி திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையானது விரைவில் அம்மன் மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அம்மன் மாநாடு அறிவிப்புக்கு எடுத்த எடுப்பிலேயே பெரியாரிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திராவிடர் தளம்- காட்டாறு குழு நிர்வாகிய பெரியாரிஸ்ட் அதி அசுரன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்து அறநிலையத்துறை, அம்மன் கோவில்களில் விளக்கு பூஜைகளை அறிமுகப்படுத்தியதாம்! அந்த வழியில் அம்மன் மாநாடுகள் நடத்த முயற்சி எடுக்கப்படுமாம்! அம்மன் மாநாடுகளை நடத்துவதற்கு முன்பாக - தலித் மக்களை நுழையவே விடாத அம்மன் கோவில்களில் தலித் மக்கள் வழிபடுவதற்குரிய உரிமையைப் பெற்றுத் தர முடியுமா?
அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு அவரது துறை சார்ந்த ஒரு தகவல்.
வாய்ப்பிருந்தால் கீழே கூறப்பட்டுள்ள கோவில்களிலுள்ள ஜாதிவெறியைத் தடுக்க முயற்சி செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு விளக்குபூஜை, மாநாடு போன்ற பா.ஜ.க. வேலைகளை திராவிட அரசின் சார்பில் செய்யாதீர்கள் :
எமது ஆய்வில் 85 பஞ்சாயத்துகளில் 'வழிபாட்டுத் தலங்களில் பாகுபாடுகள்' கடைப்பிடிக்கப் படுகின்றன என்ற கண்டறியப் பட்டுள்ளது.
85 பஞ்சாயத்துகளில் எமது குழுவினர் ஆய்வு செய்ததில்,
1. 69 கோவில்களில் தலித்துகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்
2. 72 கோவில்களில் சன்னி தானம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
3. 56 கோவில்களில் அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை
4. தலித் குடியிருப்பு பகுதிக்குள் தேர் விடாத கோவில்களின் எண்ணிக்கை 54.
5. வழிபாட்டு நேரங்களில் 56 கோவில்களில் பாகுபாடு டைபிடிக்கப்படுகின்றன
6. 52 கோவில்களில் தலித்துகளுக்கு பரிவட்டம் கட்டப்படுவதில்லை
7. 33 கோவில்களில் தலித்துகளுக்கு வடம் பிடிக்க அனுமதி மறுப்பு
8. பிரசாதம் வழங்குவதில் 59 கோவில்களில் பாகுபாடு
9. கோவில் கலை நிகழ்ச்சிகளின் போது 64 கோவில்களில் தலித்துகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
10. பால்குடம், தீச்சட்டி போன்ற சடங்கின்போது 60 கோவில்களில் பாகு பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

இவற்றை எல்லாம் களைய முதலில் அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெரியாரிஸ்ட் அதி அசுரன் வலியுறுத்தி உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications