பறை.. பறை.. உடல் சிலிர்க்க ஒலிக்கப்பட்ட இசை.. சிங்கப்பூர் அதிபர் தர்மனுக்கு தந்த வரவேற்பு.. பெருமை!
சென்னை: சிங்கப்பூரின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள தர்மன் சண்முகரத்தினம் அவர்களுக்கு 'பறை' மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
சர்வதேச மேடைகளில் அடுத்தடுத்து தமிழர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவது கவனம் பெற்றுள்ளது. தமிழர்களின் கலாச்சாரமும் சர்வதேச அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. முக்கியமாக இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்க காரணமாக இருந்த முக்கியமான நபர் தமிழர்.

சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல். இந்த திட்டத்தில் செயல்பட்ட பலர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திரயான் 3 என மூன்று திட்டங்களிலும் திட்ட இயக்குனர்களாக இருந்து இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கியது தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள்தான். முதலில் சந்திரயான் 1 திட்டம் 2008 ல் செயல்படுத்தப்பட்டது.
இந்த சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். இதன்பின் சந்திரயான் 2 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது இஸ்ரோ இயக்குநர் தமிழரான கே சிவன். அதேபோல் சந்திரயான் 2 திட்டத்தின் திட்ட இயக்குனராக இருந்தவர் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த வனிதா எனும் விஞ்ஞானி ஆவார்.
தமிழர் தேர்வு : இந்த நிலையில்தான் சமீபத்தில் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முக ரத்னம் அபார வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்து சர்வதேச மேடைகளில் அடுத்தடுத்து தமிழர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவது கவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு வாரமாக தமிழர்கள் பலர் சர்வதேச செய்திகளில் முன்னிலை பெற்றுள்ளனர். இந்த நிலையில்தான் சிங்கப்பூரின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள தர்மன் சண்முகரத்தினம் அவர்களுக்கு 'பறை' மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
That's Tharman Shanmugaratnam, newly appointed President of Singapore being welcomed by beat of 'Parai' drums.
— Uppalavanna (@BlueLotusEnby) September 28, 2023
The same Parai drums relegated to funerals in India as a caste profession of Tamil Dalits. pic.twitter.com/AMGuX4Xd2J
தமிழ்நாட்டில் பறை இசை என்னும் அற்புதமான இசையை.. சாவு மேளமாக.. தாழ்த்தப்பட்ட மக்களின் மேளமாக பலரும் கருதும் நிலையில்.. அதை எல்லாம் உடைத்து தள்ளி.. சம்பிரதாயங்களை தூக்கி வீசி.. பறை இசை முழங்க.. பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் பிரம்மாண்ட வரவேற்பு அவருக்கு கொடுக்கப்பட்டது.
தமிழரான அவருக்கு பறை இசை மிகவும் பிடிக்கும் என்பதால் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்தியாவில் சாவு மேளமாக பார்க்கப்படும் ஒன்றை.. சிங்கப்பூரின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள தர்மன் சண்முகரத்தினம் தனது வரவேற்பிற்கு பயன்படுத்தியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இங்கே சாதி பிரிவுகள், சாதி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக மக்கள் பலரும் பறை இசையை ஊக்குவிப்பது இல்லை. கேரளாவின் செண்டை மேளத்திற்கு இங்கே கிடைக்கும் ஆதரவு கூட பறைகளுக்கு கிடைப்பது இல்லை. ஆனால் சிங்கப்பூரில் அதிபரை வரவேற்க கூட இந்த இசை பயன்படுத்தப்பட்டு இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications