375 ஆண்டுகளாக மறைந்திருந்த பூமியின் 8வது கண்டம்! திடீரென கண்டுபிடிப்பு! உள்ளே வாழும் 53 லட்சம் பேர்
சென்னை: 375 வருடங்களாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்ணில் படாமல் மறைந்து இருந்த 8வது கண்டம் ஒன்றை தற்போது கண்டுபிடித்து உள்ளனர்.
நாம் சிறு வயதில் இருந்தே உலகில் 7 கண்டங்கள் இருக்கிறது என்றுதான் படித்து இருக்கிறது. ஏழு கண்டங்கள்: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவைதான் உலகில் உள்ள 7 கண்டங்கள். இந்த நிலையில்தான், விலங்கியல் வல்லுநர்கள், புவியியல் வல்லுநர்கள், மற்றும் நில அதிர்வு நிபுணர்களின் சிறிய குழு, புதிதாக மறுசீரமைக்கப்பட்ட கண்டங்களின் வரைபடத்தை வெளியிட்டு உள்ளனர்.

அவர்கள் Zeelandia அல்லது Te Riu-a-Maui என்ற பெயரில் புதிய கண்டம் ஒன்றை.. அதாவது 8வது கண்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய கண்டதை கண்டுபிடித்தனர். ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் ஆய்வு கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளன.
ஜிலாண்டியா - Zealandia என்பது 1.89 மில்லியன் சதுர மைல்கள் (4.9 மில்லியன் சதுர கிமீ) கொண்ட ஒரு சிறிய கண்டமாகும், இது மடகாஸ்கரை விட ஆறு மடங்கு பெரியது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் சிறிய, இளமையான, ,மெல்லிய கண்டம் இதுதான். இந்த கண்டம் 94 சதவிகிதம் தண்ணீருக்குள் இருக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வெளியே உள்ளது.
தீவுகள் போல நிலம் அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே உள்ளது. அதாவது நியூசிலாந்து போல ஆங்காங்கே கீழே நிலம் ஒட்டி இருந்தாலும் மேலே நிலப்பரப்பு ஓட்டி இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. Zealandia என்பதுதான் இந்த புதிய கண்டம். தற்போது நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இருப்பது இந்த கண்டத்தில்தான்.
இந்த கண்டத்தின் தீவுகளில் ஒன்றுதான் நியூசிலாந்து என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தனை காலமாக கடலுக்கு அடியில் இருந்ததால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை. கடலுக்கு அடியில் இருந்த தடங்களை ஆய்வு செய்து அதன் மூலம் இந்த கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர். அங்கே எண்ணெய் கிணறு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்காக டிரில் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட பாறைகளின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது.
ஜிலாண்டியா முதலில் கோண்ட்வானாவின் பண்டைய சூப்பர் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது, இது சுமார் 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அடிப்படையில் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் ஒன்றாக கொண்டது ஆகும் இது. இதில் இருந்துதான் ஜிலாண்டியா அப்போது பிரிந்து கடலுக்கு அடியில் சென்று இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
83 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்த ஜிலாண்டியா உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தெற்கு ஜிலாண்டியா கடலுக்கு உள்ளே முழுமையாக இருப்பதாகவும், வடக்கு ஜிலாண்டியாவில் சிறிய சிறிய பகுதிகள் ஆங்கங்கே உள்ளே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். இதைத்தான் தற்போது புதிய கண்டம் ஜிலாண்டியா என்று அறிவித்துள்ளனர். நியூசிலாந்து மக்கள் தொகையும் சேர்த்து இங்கே கிட்டத்தட்ட 53 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
ஆனால் இதை உலக நாடுகள் இன்னும் ஏற்கவில்லை. அதேபோல் ஐநா சபையும் இன்னும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,












Click it and Unblock the Notifications