ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை... தேர்தல் ஆணையம்
வேலூர் மக்களவை தொகுதியில் மட்டுமே தேர்தல் ரத்து... குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும்
Recommended Video
சென்னை: வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது. பரப்புரை ஓய்ந்த சில மணி நேரங்களில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை இல்லை எனவும், வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுத்துள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை சோதனை குறித்து அறிக்கை அளித்து விட்டதாகவும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட சதி என்றும், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். தேர்தலை ரத்து செய்வதற்கு முன் 2 வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications