ஆட்சியில் பங்கில்ல.. ஆனா அந்த அதிகாரம் தருவோம்! காங்கிரஸைத் தக்கவைக்க ஸ்டாலின் வீசிய புது 'தூண்டில்'
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. ஒருபுறம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸிற்கு 100 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவியை வழங்குவதாக 'மெகா ஆஃபர்' கொடுத்துள்ளதாக தகவல்கள் வரும் நிலையில், காங்கிரஸைத் தக்கவைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார்.
நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, நடிகர் விஜய் தரப்பிலிருந்து காங்கிரஸ் தலைமைக்கு ஒரு பிரம்மாண்டமான தூது அனுப்பப்பட்டுள்ளது. அதில், "எங்களுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸிற்கு 100 தொகுதிகள் ஒதுக்கப்படும் மற்றும் ஆட்சியில் பங்கு அளிப்பதோடு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்படும்" என்று உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த அதிரடி ஆஃபர் தான் ராகுல் காந்தியை ஒரு தீர்க்கமான முடிவெடுக்க விடாமல் யோசிக்க வைத்துள்ளது.
திமுகவின் 'இறுதி' எல்லைக்கோடு
இதற்கு இடையே தான் காங்கிரஸைத் தக்கவைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத்திற்கு திமுக தரப்பில் மிகத்தெளிவான செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், "காங்கிரஸிற்கு 25 முதல் 28 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும், அதிகபட்சம் போனால் 30 தொகுதிகள் வரை தரத் தயார். ஆனால், அமைச்சரவையில் பங்கு (Cabinet Share) என்பதற்குப் பேச்சிற்கே இடமில்லை" என்று திமுக உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸின் நீண்டகாலக் கோரிக்கையை நிராகரித்துள்ள ஸ்டாலின், அதே சமயம் அவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக சில "மாற்று அதிகாரப் பகிர்வு" திட்டங்களை ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் மூலம் பகிர்ந்துள்ளார்.
ஸ்டாலின் வழங்கிய புதிய 'பவர்' ஆஃபர்கள்
அமைச்சரவையில் இடமளிக்க முடியாது என்றாலும், அரசு நிர்வாகத்திலும் சட்டமன்றத்திலும் காங்கிரஸிற்கு முக்கியத்துவம் அளிக்க ஸ்டாலின் முன்வந்துள்ளார். அந்தத் தூதுச் செய்தியில் உள்ள முக்கிய அம்சங்கள்:
துணைச் சபாநாயகர் பதவி: தமிழக சட்டமன்றத்தின் கௌரவமிக்க துணைச் சபாநாயகர் (Deputy Speaker) பதவி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும்.
அரசு வாரியத் தலைவர்கள்: செல்வாக்குமிக்க 5 அரசு வாரியத் தலைவர்கள் (Board Chairman) பதவிகள் காங்கிரஸிற்கு ஒதுக்கப்படும்.
அரசு நியமனப் பதவிகள்: பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நலவாரியத் தலைவர்கள் பதவிகளில் காங்கிரஸிற்கு குறிப்பிட்ட சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.
உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்கள்: வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அதிக தொகுதிகளை வழங்க திமுக தயாராக உள்ளது.
"முடிவு உங்கள் கையில்" - காங்கிரஸிற்கு நெருக்குதல்
"காங்கிரஸை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் திராவிடக் கட்சிகளின் தனிப்பெரும் பெரும்பான்மை என்ற கொள்கையில் சமரசம் செய்ய முடியாது. துணைச் சபாநாயகர் மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் என்பது மிகப்பெரிய அங்கீகாரம். இதை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் அவர்கள் கையில் தான் உள்ளது" என்று திமுகவின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
விஜய் தரப்பில் இருந்து சொல்லப்படும் 'துணை முதல்வர்' என்ற பகட்டான வாக்குறுதியை நம்பி காங்கிரஸ் வெளியேறுமா அல்லது திமுக வழங்கும் இந்த 'நிச்சயமான அதிகாரத்தை' ஏற்றுக்கொண்டு பழைய கூட்டணியிலேயே நீடிக்குமா என்பது ராகுல் காந்தியின் முடிவில்தான் உள்ளது.
-
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள்












Click it and Unblock the Notifications