மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும், வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.
தகிக்கும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீசும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 சென்டி மீட்டர் மழையும், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில், தென் மேற்கு பருவமழை எதிரொலியாக, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட கேரளா எல்லையோரப் பகுதிகளில் அவ்வப்போது, காற்றுடன் சாரல் மழை பெய்கிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications