அண்ணா நகர் சிறுமி வழக்கு.. இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்.. ஒரே நாளில் நடந்த இரண்டு முக்கியமான விஷயம்
சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பெண் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்கி சென்னை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைதான அதிமுக பிரமுகருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் சதீஷ் என்ற வாலிபரும், 16 வயது சிறுவனும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயரை நீக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி பணம் வாங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.

அதேபோன்று குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டு, அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததாக முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் சுதாகரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இன்ஸ்பெக்டர் ராஜி, சுதாகர் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை அண்ணாநகர் சிறுமி வழக்கின் விவரம்: சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் சிறுமியின் பெற்றோரை அண்ணா நகர் பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. மேலும் அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது. மேலும் இது தொடர்பாக புலன் விசாரணை நடத்த சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சட்டம் - ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் பிருந்தா (வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்) ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. மேலும் இந்த உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் குழு தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில் அண்ணா நகர் சிறுமி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜனவரி 21ம் தேதியான நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகினார். அவர் வாதிடும் போதும் இந்த வழக்கில் கைதாகியுள்ள பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் ராஜி, அதிமுக முன்னாள் நிர்வாகி சுதாகர், முக்கிய நபரான சதீஷ் ஆகியோர் மீதான வரைவு குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என்றார். அண்ணா நகர் பெண் காவல் ஆய்வாளர் ராஜி மீதான குற்றப்பத்திரிகைக்கு அரசின் அனுமதி கிடைத்தவுடன் மூவருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சம்பத்குமார் ஆஜரானார். அவர் வாதிடுகையில். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி அளித்த வாக்குமூலம் பொதுவெளியில் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீஸார் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு இதுவரையிலும் முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் சிறுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சம்பத்குமார் கூறினார்.
அதையடுத்து நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறும் போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் பொதுவெளியில் வெளியானது எப்படி என்பது குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய ஏதுவாக, அதற்கான அரசின் அனுமதியை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். மேலும் இழப்பீடு கோரி தனியாக மனுத் தாக்கல் செய்ய அண்ணா நகர் சிறுமியின் தாயாருக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டனர்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications