Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆறு மணி நேரம் மிச்சம்.. சென்னை மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை எப்படி அமைகிறது? குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து தடையின்றி செல்வதற்காகவும் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை துறைமுகம்- மதுரவாயல் விரைவு சாலை திட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

சென்னை மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்ஏற்படுவதை கருத்தில் கொண்டு 2007, 2008, 2009ம் ஆண்டு வாக்கில் நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் தான் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதேபோல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவைக்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் என்ன காரணத்தாலோ இன்று வரை அந்த பணிகள் முடியவே இல்லை.. அடுத்தாக சென்னையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கவும் அப்போது தான் திட்டமிடப்பட்டது.

chennai maduravayal road


மதுரவாயல் உயர்மட்ட சாலை:
இதேபோல் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசலால் லாரிகள் துறைமுகத்துக்கு வர முடியாமல் தவித்தன. இதையடுத்து சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து தடையின்றி செல்வதற்காகவும் ரூ.1,815 கோடியில் கடந்த 2009-ம் ஆண்டு துறைமுகம்- மதுரவாயல் இடையே புதிதாக உயர்மட்ட சாலை அமைக்கும் பணி ஆரம்பம் ஆனது.

ஜெயலலிதா எதிர்ப்பு: 2009 முதல் 2011 வரை 15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், 2011-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இந்த திட்டம் அடியோடு முடங்கியது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்த திட்டத்தை செயல்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இறுதி வரை அனுமதிக்கவே இல்லை..

சென்னையில் கடும்‛டிராஃபிக்’..கோயம்பேடு-மதுரவாயல் சாலையில் 4கிமீ-க்கு நிற்கும் வாகனங்கள்!மக்கள் அவதி


மத்திய அரசு முயற்சி: இந்த திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014 முதல் 2021 வரை பலமுறை முயன்றது. ஆனால் திட்டம் நடைமுறைக்கு வரவே இல்லை.. இந்நிலையில் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் திட்டமதிப்பு உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரத்து 855 கோடி செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே 20.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு பறக்கும் சாலை ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றப்பட்டிருக்கிறது.

ஈரடுக்கு மேம்பாலம் எப்படி: இந்த திட்டத்தில் சுவாமி சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈரடுக்கு மேம்பாலத்தில், முதல் அடுக்கில் பஸ்கள், இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் 6 வழிப்பாதை அமைக்கப்படுகிறது. அதேபோல் 2-ம் அடுக்கில் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை இயக்கப்படும் கனரக சரக்கு வாகனங்கள் செல்லும் வகையில் 4 வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது.

மதுரவாயல் டூ துறைமுகம்.. ஈரடுக்கு மேம்பாலம் சென்னைக்கே வரப்பிரசாதம்.. இத்தனை வசதியா? தமிழக அரசு மாஸ்


604 தூண்கள் அமைப்பு: இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக இறங்கி உள்ள அதிகாரிகள், கூவம் ஆற்றங்கரையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தூண்கள் இடித்து அகற்றப்பட்டு புதிய தூண்கள் அமைக்க முடிவு செய்துள்ளார்கள். இதற்காக, ஏற்கனவே மதுரவாயலில் சாலை நடுவில் உள்ள மின்சார கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. தற்போது எழும்பூர்- ஆயிரம் விளக்கு பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பழைய 17 தூண்கள் வேகமாக இடிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக அமைக்கப்படும் 604 தூண்களில் 375 தூண்கள் கூவம் ஆற்றின் பகுதிகளிலும், 210 தூண்கள் கடலோர பாதுகாப்பு ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளிலும், மீதம் உள்ளவை நகரப்பகுதிகளிலும் அமைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


13 சரிவு பாதைகள்: இந்த மேம்பாலத்திற்காக சில இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. துறைமுகம் அருகே 120 மீட்டர் தூரத்திற்கு இணைப்பு பகுதியில் தேவைப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல் சென்னை அரும்பாக்கத்தில் 4 ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கும் இழப்பீடு தரப்பட்டுள்ளது. இது தவிர துறைமுகத்தில் கடற்படையின் இடத்தில் உள்ள 64 வீடுகளை முடிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு சென்னை நந்தனத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன. அதன்பின்னர் தான் கடற்படை இடத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய மேம்பாலத்தில் 13 சரிவு பாதைகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 மணி நேரம் குறையும்: தற்போது சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகில் உள்ள கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதற்கான துளை போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை 4 பகுதிகளாக கட்டி முடிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48 சதவீதம் அதிகரிக்கும் என தெரிகிறது. மேலும் சென்னையில் காத்திருப்பு நேரமும் 6 மணி நேரம் வரை குறையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+