ஆக்சுவெல் பிளான் இதுதான்.. மாதிரி பள்ளிகளில் நுழைவு தேர்வு குறித்து பள்ளி கல்வி ஆணையர் விளக்கம்
மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு குறித்து பள்ளி கல்வி ஆணையர் விளக்கமளித்துள்ளார்
சென்னை: தமிழ்நாட்டில் 15 மாதிரி பள்ளிகள் இந்த ஆண்டு முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட்டதாக தகவல் பரவியது. இதற்கு அரசியல் கட்சியினரும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தேர்வு குறித்து பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் விளக்கமளித்துள்ளார்.
தனியார் பள்ளிகளின் தரத்திற்கு இணையாக அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் மாநிலம் முழுவதும் 15 மாதிரி பள்ளிகள் மற்றும் 26 தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றிருந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதன்படி முதற்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இப்பள்ளிகள் இந்த ஆண்டு முதல் செயல்பட இருக்கின்றன. உண்டு உறைவிட வசதியுடன் கூடிய இப்பள்ளிகள் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் பயில கிராமப்புற மாணவர்களை தகுதிப்படுத்தும்.

மாணவர் சேர்க்கை
இந்த பள்ளிகளில் பயில 10ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தவிர தேசிய திறனறிவுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழி தேர்வு மூலம் தேர்ச்சி பெறுபவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மட்டுமல்லாது விளையாட்டு மற்றும் கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் இப்பள்ளியில் சேர வாய்ப்பளிக்கப்படும். இந்நிலையில் இப்பள்ளிகளில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதற்கான தேர்வு மார்ச் 04ம் தேதி நடைபெற்றது.

தேர்வு
இந்த தேர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் கல்வியாளர்களும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து கூறுகையில், "தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள 15 மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 4-ஆம் நாள் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்திருக்கிறார். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது; கண்டிக்கத்தக்கது!

எதிர்ப்பு
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் தான், அத்தேர்வை தமிழக அரசும், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கின்றன. நீட் தேர்வை எதிர்த்து கொண்டு பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது என்ன வகையான சமூகநீதி? நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தர உள்கட்டமைப்பு மற்றும் உண்டு - உறைவிட வசதியுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், அவை கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை புறக்கணிப்பதற்கானதாக இருக்க கூடாது!

பாமக
அண்ணா பல்கலை. பொறியியல் படிப்புக்கே நுழைவுத் தேர்வு இல்லாதபோது, பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும். இத்தேர்வும், நீட்டும் ஒரே கொள்கையிலானவை. அச்சமூக அநீதிக் கொள்கை நமக்குத் தேவையில்லை. மாதிரி பள்ளி நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று ட்விட்டரில் கூறியிருந்தார். முன்னதாக இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டு கொள்ளையை பின்பற்றியும், மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் நடைபெறும் என்று அரசு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

விளக்கம்
இப்பிரச்சனை பெரிதாக வெடித்த நிலையில், தற்போது பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது, "அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக அடிப்படை மதிப்பீட்டு தேர்வு திட்டமிடப்பட்ட நிலையில், அந்த தேர்வை சிலர் நுழைவ தேர்வு என தவறாக புரிந்துக்கொண்டுள்ளனர்" என்று கூறியுள்ளார். மேலும், "அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் ஆர்வமும், திறமையும் உடைய மாணவர்களை தொடர்ச்சியாக பயிற்றுவிக்கவும், தேவையான உதவிகளைச் செய்யவும், அந்த மாணவர்கள் விருப்பப்படும் உயர் கல்வி நிறுவனங்களைச் சென்றடையும் வரை நீடித்த தொடர் கவனிப்பு, வழிகாட்டுதல் வழங்கவும் மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு (பேஸ்லைன் சர்வே) நடத்தத் திட்ட மிடப்பட்டது.

உயர்கல்வி
இந்தச் செய்தி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்த இருப்பதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு நுழைவுத்தேர்வு குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. அந்த நிலைப்பாட்டில் தற்போதும் எவ்வித மாற்றமும் இல்லை. தமிழகத்தில் உள்ள செம்மைப் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களும் அவரவர் தம் விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்ப உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து வழங்கும்" என்று கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications