ரொம்ப ஏமாற்றமா போயிட்டு.. தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும்.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பேச்சு
சென்னை: மயிலாடுதுறையில் கம்பர் விழாவில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிடாமல் ’தீபம் ஏற்றகூடிய நாள் விரைவில் வரும்’ என்று கூறினார். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் ஏற்படுகின்ற போரின்போது முதலில் தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனவும், ஆனால் இறுதியில் அறமே வெல்லும் என்று சொல்வது கம்பராமாயணம் என அவர் பேசினார்.
கவிச்சக்கரவர்த்தி என்ற அழைக்கப்படும் கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் கம்பர் விழா நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், "கம்பனும், வைணவமும்" என்ற நூலை வெளியிட்டார். அப்போது அதனை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நிழச்சியில் ஜி ஆர் சுவாமிநாதன் பேசியதாவது:-

ரொம்ப ஏமாற்றமா போயிட்டு..
நான் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரும் போது சட்டக் கல்லூரி மாணவிகள் இருவர் என்னிடம் வந்து ஆட்டோகிராஃப் கேட்டனர். அவர்கள் நெற்றியில் நிறைய விபூதி இருந்தது. நம் சமய அடையாளங்களை இட்டுக்கொள்வதற்கு எந்த வித கூச்சமும் இருக்க கூடாது. அதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன்.
தீபத்துக்கும் எனக்கும் என்ன பொறுத்தம் என்றே தெரியவில்லை. நான் வந்து குத்துவிளக்கிற்கு தீபம் ஏற்றுவதற்காக போனேன். ஆனால் ஐயா, நீங்கள் தீபம் ஏற்றக்கூடாது என்று சொல்லிவிட்டனர். நிகழ்ச்சி தொடங்கும் போது தீபம் ஏற்றப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்லியிருந்ததால் நான் சென்றேன்.
தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்
ஆனால் நிகழ்ச்சியில் பெண்களுக்கு தான் குத்துவிளக்கு ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனாலேயே அவர்கள் என்னை நீங்க ஏற்றக்கூடாது ஐய்யா.. என்று சொன்னார்கள். நீங்கள் ஏற்றவேண்டாம். அங்கேயே உட்காருங்கள் என்று சொல்லிவிட்டனர். எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது.. (நகைச்சுவையாக பேசினார்). தீபம் ஏற்றகூடிய நாள் விரைவில் வரும்.. என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
கம்பர் விழா
மேலும் நூலை வெளியிட்ட பிறகு பேசிய அவர், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் ஏற்படுகின்ற போரின்போது முதலில் தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனவும், ஆனால் இறுதியில் அறமே வெல்லும் என்று சொல்வது கம்பராமாயணம் என அவர் பேசினார்.
முன்னதாக தேரழந்தூர் கம்பர் கழகம் சார்பில் கம்பர் விழாவின் தொடக்கமாக ஆமருவியப்பன் கோயிலில் இருந்து கம்பர் கோட்டம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உச்சியில் தீபம் ஏற்றுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதியும் வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நீதிபதி அவமதிப்பு வழக்கு தற்போது நடந்து வருகிறது. இந்த சூழலில் தான் கம்பர் விழாவில் பங்கேற்ற நீதிபதி, திருப்பரங்குன்றம் என்ற வார்த்தையை குறிப்பிடமால் தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும் என கூறியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications