ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி
சென்னை: திமுக இதுவரை சந்திக்காத புதிய எதிரி என்றால் அது தவெக தான்.. தவெகவினர் செய்யும் நெரேட்டிவ் அரசியல் என்பது தமிழகத்திற்கே புதியது. இன்ஸ்டாவில் உள்ள ஜென்சி இளைஞர்கள், இளம் பெண்கள் துணையுடன் திமுகவிற்கு எதிராக பிரச்சாரங்கள் கடுமையாக செய்து வருகிறது. இது ஒருபுறம் எனில், கோவை சிறுமி வழக்கு உள்பட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக திமுகவிற்கு எதிராக போலியான செய்திகள் பரவி வருகிறது. இப்படி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உடன்பிறப்புகள் கோரிக்கை வைத்து வந்தார்கள். கோரிக்கை என்று சொல்லவதற்கு பதில் கடுமையான எச்சரிக்கை வைத்தனர். தற்போது திமுக தலைமை நேரடியாக களம் இறங்கி உள்ளது. திமுக எம்பி வில்சன் முக்கியமான அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோவை சிறுமி வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக திமுக குறித்து கடுமையான செய்திகள் இன்ஸ்டாவிலும், எக்ஸ் தளம், பேஸ்புக், யூடியூப் போன்ற தளங்களிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதற்கு எதிர்வினை ஆற்ற முடியாமல் திமுக உடன்பிறப்புகள் திணறிப் போயிருக்கிறார்கள். அதிலும் சில செய்திகள் பொதுமக்களை எளிதாக நம்ப வைக்கும் அளவிற்கு போலி செய்திகள் என்பதால் , பலர் தூக்கம் தொலைத்து இருக்கிறார்கள். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை கொண்ட விட்டுவைக்காமல் கண் மூடித்தமான சிலர் போலி செய்திகளை பரப்புகிறார்கள். இந்த போலி செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் போனால் பெரிய சிக்கலை திமுக எதிர்கொள்ளும் என்பது திமுகவினரின் கருத்தாக உள்ளது.

இது தொடர்பாக திமுகவிற்காக களமாடும் நிர்வாகிகள் கூறுகையில், "இணையத்துக்கு தனி லீகல் விங் உருவாக்கி கழகம் மீது பொய் அவதூறு பரப்புவர்களை கோர்ட் வாசல்னு அலைய விட்டா தான். அடுத்து தெரிஞ்சே பொய் செய்தி பரப்ப கொஞ்சமாவது யோசிப்பான். இதை போன ஆட்சியிலேயே நாம செஞ்சு இருந்தா.. இப்போ மறுபடியும் நாம ஆட்சியிலே இருந்திருப்போம். இனிமேலும் இதை செய்யாமல் வேடிக்கை மட்டும் பாத்துட்டு இருந்தா நமக்கு நிரந்தர கூப்பு தான்" என்று கூறியிருந்தார்.
இன்னொரு நிர்வாகியோ, "ஒரு 200 பேர் மேல அவதூறு வழக்கு போட்டு கேஸ் நடத்த ஒரு 50,60 லட்சம் செலவாகுமா..? உங்கிட்ட காசு இல்லையா? இல்ல வழக்கறிஞர் அணியில வக்கீல் இல்லையா? கொஞ்சமாவது ரோஷப்படுங்கையா" என்று சில கடினமான வார்த்தைகளையும் சேர்த்து விமர்சித்து இருந்தார். இன்னும் பலர் திமுக ஐடி விங்கை டேக் செய்து விமர்சனங்களை முன் வைத்தபடியே இருந்தனர். இறுதியாக திமுக தலைமையின் கவனத்திற்கு அந்த விவகாரம் போனது.
இதுபற்றி திமுக ஐடி விங் வெளியிட்டிருந்த பதிவில், "உங்களில் பலர் @dmkitwing ஐ டேக் (Tag) செய்து, தவெக (TVK) ஐடி பக்கங்கள் வெளியிட்ட சில வீடியோ கிளிப்புகளைப் பகிர்ந்து வருகிறீர்கள். தற்போதைய அரசாங்கத்தின் (தவெக அரசு) மாபெரும் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சியில், அவர்கள் வழக்கம்போல திமுக மற்றும் அதன் தலைமைக்கு எதிராக முற்றிலும் பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர்.
அவ்வாறு பகிரப்பட்ட அனைத்து பதிவுகளும் திமுக சட்டப் பிரிவு (DMK Legal Wing) மற்றும் அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சமூகத்தில் பரப்பப்படும் இந்த போலிச் செய்தி (Fake News) அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அறிவாலயத்தின் சட்டப் பிரிவு கண்டிப்பாகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதுபோன்ற தீங்கிழைக்கும் போலிச் செய்திகள் அனைத்தையும் நாங்கள் எப்போதுமே தலைமை அலுவலகம் (HQ) மற்றும் சட்டப் பிரிவு வழக்கறிஞர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற வீடியோ கிளிப்புகள் ஏதேனும் இருந்தால், தயவுசெய்து அவற்றை @DMKLegalWing பக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது..
இதனிடையே திமுக மாநிலங்களவை எம்பியும், மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "போலியான ஆவணங்களைத் தயாரித்தல் , ஜோடிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்த இரண்டு குற்றவாளிகளுக்கு எதிராக, தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் குற்றவியல் புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் மூலம், அவர்கள் மீது அவசர குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், இதன் பின்னணியில் உள்ள சதி நெட்வொர்க்குகளைக் கண்டறியவும், காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் , டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் மற்றும் அனைத்து சட்டவிரோத உள்ளடக்கங்களையும் உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் கோரப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த நபர்களுக்கு எதிராக அவர்களின் தனிப்பட்ட முறையில், இழப்பீடு கோரி தனியாக உரிமையியல் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது"இவ்வாறு கூறியுள்ளார்.
A Criminal Complaint has been submitted to the DGP @tnpoliceoffl and the Commissioner of Police Greater Chennai against these two offenders involved in various criminal and unlawful activities, including forgery and creating fabricated photos and content. The complaint requests… https://t.co/5ScM0mgvnO
— P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் (@PWilsonDMK) May 25, 2026
இதன் மூலம் திமுக தலைமை நேரடியாகவே இந்த விவகாரத்தில் களம் இறங்க முடிவு செய்திருப்பது தெரிகிறது. நெரேட்டிவ் செட் செய்து தாக்கும்" தவெக-வின் உத்திகளுக்கு எதிராக, திமுக இப்போது மிகக் கடுமையான சட்டப் பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது என்பதை வில்சன் எம்பியின் இந்தப் பதிவு உறுதிப்படுத்துகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதோடு நிறுத்தாமல், அவர்களின் சொந்தப் பெயரிலேயே பல கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்கும் சிவில் வழக்கையும் திமுக தொடரவுள்ளது. இது தவெக-வின் ஐடி விங் நிர்வாகிகளுக்குப் பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும் வியூகமாக பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications