அமீருக்கு 1 கோடி? முக்கிய ‘புள்ளிகளுக்கு’ 21 கோடி! வாரி இறைத்த ஜாபர் சாதிக்? ED விசாரணையில் ஷாக்..!
சென்னை: சுமார் 1800 கோடி ரூபாய் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் பிரமுகரும், தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலில் சம்பாதித்த பணத்தை பலருக்கும் அவர் அனுப்பியது தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பணம் அவரது மனைவி அமீனா பானு வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் மிகப்பெரிய அளவில் போதை பொருட்கள் பிடிபட்டது. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் போதை பொருட்கள் பிடிபட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தபட்டமைன் மற்றும் சூடோபெட்ரொம் ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவரும், பிரபல தயாரிப்பாளருமான ஜாபர் சாதி கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக ராஜஸ்தானில் பதுங்கி இருந்த ஜாபர் சாதி கைது செய்யப்பட்டதோடு, அவரது கூட்டாளியான சதானந்தமும் சென்னை தேனாம்பேட்டையில் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஐந்து பேர் மீதும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தியதை ஜாஃபர் சாதிக் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்குக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டன. அவரது குரல் மாதிரி சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போதை பொருள் கடத்தல் மூலமாக வரும் பணத்தை ஜாபர் சாதிக் சினிமா உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பிரபல இயக்குனரான அமீரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் கடத்தல் வழக்கில் மட்டும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் சட்டவிரோத பணப் பறிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் சுமார் 21 கோடியை சில முக்கிய பிரமுகர்களுக்கு ஜாஃபர் சாதிக் கொடுத்திருக்கிறார்.
மேலும் இயக்குனரும் நடிகருமான அமீருக்கும் அவர் ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. சாதிக்கின் மனைவி அமினா பானுவின் வங்கிக் கணக்கில் இருந்து தான் அமீருக்கு ஒரு கோடி ரூபாய் அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் போதைப் பொருளில் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை தான் ஜாபர் சாதிக் பிறருக்கு வழங்கினார் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜாபர் சாதிக்கின் தம்பியான மைதீன் என்பவரது வங்கிக் கணக்கிலிருந்து சில முக்கிய பிரபலங்களுக்கு 21 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை பேரிச்சை பழத்தை இறக்குமதி செய்து திரட்டியது போல சாதிக் கணக்கு காட்டி இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் 21 கோடி ரூபாய் யார் யாருக்கு வழங்கப்பட்டது என்ற தகவலை அவர்கள் தெரிவிக்கவில்லை. அவ்வாறு வெளியிட்டால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அந்த தகவல்களை வெளியிடவில்லை எனவும், விரைவில் இது தொடர்பான முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications