21-ம் நூற்றாண்டு.. வருஷமும் 21.. நாளும் மே 21.. மரணமும் 21.. நடிகை சித்ராவின் அதிர்ச்சி மரணம்..!
நடிகை நல்லெண்ணைய் சித்ரா காலமானார்
சென்னை: பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்... இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
80"களில் பிரபலமாக இருந்தவர் நடிகை சித்ரா. ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம், உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சித்ரா.
கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார்.

பிறந்தநாள்
கடந்த மே 21-ம் தேதிதான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியிருந்தார் சித்ரா... அதுகுறித்து அவர் சொல்லும்போது, "21-ம் நூற்றாண்டு, வருஷமும் 21, நாளும் மே 21-ன்னு சொல்லி சிலர் வாழ்த்தினப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது" என்று ஒரு நாளிதழுக்கு இவர் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேட்டியும் தந்திருந்தார். இப்போது அதே 21-ம் தேதி சித்ரா மரணமடைந்திருப்பது அவரது நண்பர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகை
80'களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் சித்ரா... 'சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த இவரது கேரக்டர் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது.. மற்ற படங்களைவிட இந்த படத்தில் சித்ராவுக்கு அழுத்தமான கேரக்டர்.. அனைவர் வீட்டு பெண்ணாகவும் பாசத்துடன் தெரிந்தார்.

சீரியல்
இதற்கு பிறகு சினிமாவில் நடித்து வந்தாலும், சீரியல்களிலும் தலைகாட்டினார்.. காமெடி இவருக்கு அல்வா சாப்பிடுவது போல இயல்பாக வரும் என்பதால், பெரும்பாலும் காமெடி கேரக்டர்களே தரப்பட்டன.. எனினும், அழுகை, சிரிப்பு, சோகம், பாசம் என அனைத்தும் கலந்த நடிகையாக மக்கள் மனசில் பதிந்து போனவர்.

நடிகை
ஒரு நல்லெண்ணய் விளம்பரத்தில் நடிக்க வந்த வந்தபிறகுதான் நல்லெண்ணய் சித்ராவாகவே அடையாளப்படுத்தப்பட்டார்... ஒரு எண்ணெய் கம்பெனி பெயரை வைத்து நடிகையை அடையாளப்படுத்தியது இவரை மட்டுமே.. எங்கு போனாலும், சித்ராவுடன், அந்த எண்ணெயும் ஒட்டிக் கொண்டுவிட்டது. சித்ரா கடைசியாக 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா' என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார். அந்த படம் 2020 ஜனவரி 3ந்தேதி வெளியானது...

சென்னை
சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்தார் சித்ரா.. சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் இருக்கிறார்... அவர் இந்த வருஷம் பிளஸ் டு முடித்துள்ளார்... பெண் குழந்தையை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் ஒதுங்கி இருந்தவர் சித்ரா.. சமீபத்தில் வேறு சில சேனல்களிலும் பேட்டி தந்திருந்தார்.. நீண்ட நாள் கழித்து சித்ராவை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்..

அதிர்ச்சி
இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் அடைந்திருப்பது பெரும் சோகம்தான்.. இப்போது அவரது உடல் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.. திரையுலகினர் தொடர்ந்து சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்... சித்ரா மறைவை அடுத்து திரை உலக பிரபலங்கள் அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்... சித்ராவின் உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications