டெங்கு விழிப்புணர்வு..மழைக்காலம் காய்ச்சல் முகாம் தொடரும்..அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி!
சென்னை: தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மால்டா குடியரசு நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜோ - எட்டினே - அபெலா உடன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் மால்டா நாட்டை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

மால்டா நாட்டு அமைச்சர்
ஆலோசனைக் கூட்டத்திற்குப் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதரத்துறை செயலாளர் செந்தில்குமார், மால்டா நாட்டை சேர்ந்த அமைச்சர் ஜோ- எட்டினே அபேலா மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சந்திப்பின்போது இரு நாட்டு மருத்துவத்துறை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மால்டா நாட்டில் மருத்துவத்துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளது. மால்டா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பின் தமிழகத்தில் உள்ள செவிலியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் - விழிப்புணர்வு
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மழைக் காலங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் அதே அளவில்தான் உள்ளது. பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 200 இடங்கள் கிடைப்பதற்கு விண்ணப்பித்துள்ளோம்.

காய்ச்சல் முகாம் தொடரும்
இந்தாண்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும். பள்ளிகளிலும் தொடர்ந்து காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது, இதுவரை நடைபெற்ற காய்ச்சல் முகாம் மூலம் 18 லட்சம் பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர்.

மால்டா நாட்டுடன் ஒப்பந்தம்
திருப்பூர் மாவட்டத்தில் 3 குழந்தைகள் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உயிரிழந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். மால்டா நாட்டு பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பின்னர், இரு நாடுகள் இடையே மருத்துவ சுற்றுலா அதிகரிக்கும். இங்குள்ள மருத்துவ பணியாளர்களுக்கு வேலைவாப்பு கிடைக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications