வட சென்னையின் ஐந்து வருட காத்திருப்புக்கு விடிவு.. வடபெரும்பாக்கம் பாலம் திறப்பு.. மக்கள் மகிழ்ச்சி
சென்னை: வட சென்னையில் மழைக்காலங்களில், புழல் உபரி கால்வாயில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், ஏற்கனவே இருந்த தாழ்வான பாலம் தொடர்ந்து நீரில் மூழ்கியது. இதனால் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வந்த காரணத்தால், அப்பகுதி மக்களுக்குக் கடுமையான சிரமத்தை சந்தித்து வந்தார்கள். இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் வடபெரும்பாக்கத்தில் புதிய பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய பாலம் இன்று திறக்கப்பட உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, ரூ.22.41 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வடபெரும்பாக்கம் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார். வடபெரும்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மாதவரத்திற்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்தப் பாலம் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்காலங்களில், புழல் உபரி கால்வாயில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், ஏற்கனவே இருந்த தாழ்வான பாலம் தொடர்ந்து நீரில் மூழ்கி, வாகனப் போக்குவரத்தைத் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்குக் கடுமையான சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்தப் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
மணலி மற்றும் மாதவரம் பகுதிகளுக்கு சாலை இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டு மே மாததில் சுமார் 22 கோடி ரூபாய் செலவில் வடபெரும்பாக்கம் பாலம் கட்டும் பணி தொடங்கியது. செனன்னை மாநகராட்சி ஆணையர் ஜே. குமரகுருபரன் இதுபற்றி கூறுகையில், "வடபெரும்பாக்கம் பாலம் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டன. இந்தப் பாலம் 190 மீட்டர் நீளமும் 7.5 மீட்டர் அகலமும் கொண்டது. மணலி மற்றும் மாதவரம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் மக்கள் இந்தப் பாலத்தால் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று கூறினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மணலி மண்டலம், வடபெரும்பாக்கத்தில் புழல் உபரிநீர் கால்வாயின் குறுக்கே ரூபாய் 22.41 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட புதிய பாலம்.#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe pic.twitter.com/LUWtt4eXR1
— Greater Chennai Corporation (@chennaicorp) December 21, 2025
மழைக்காலங்களில் எந்த பிரச்சனையும் இன்றி மக்கள் கடந்து செல்ல வசதியாக வடபெரும்பாக்கத்தில் உள்ள கால்வாயின் குறுக்கே இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் உள்ள முறையே வார்டு 17 மற்றும் வார்டு 23-ஐ இணைக்கிறது. இந்தத் திட்டத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட வடப்பெரும்பாக்கம் பாலம், கொரோனா லாக்டவுன் காரணமாக வேலைகள் நடைபெறவே இல்லை.. , நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தடைகள் மற்றும் ஒரு முக்கிய கடல்நீரைக் குடிநீராக்கும் குழாய்த்திட்டத்தை இடமாற்றம் செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிந்திருக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications