சென்னைக்கு திடீரென வந்த.. 20 ராட்சச விருந்தாளிகள்.. மிரண்டு போன மக்கள்.. ஆனால் ஒரு நல்ல செய்தி!
சென்னை: மீன் பிடி தடைக்காலத்தில் சென்னை கடல் பகுதிகளுக்கு ஒரு பெரிய முக்கிய விருந்தாளி வந்த சம்பவம் கடலிலியல் ஆய்வாளர்கள் இடையே கவனத்தை ஈர்த்து உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மீன்பிடி தடைக்கலாம் அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், அடுத்த சீசனுக்கு மீன்கள் கடலில் இருக்கவும் மீன்பிடி தடைக்கலாம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளை திமிங்கல சுறாக்கள் பார்வையிட்டு உள்ளன. இவை உலகில் உள்ள மீன்கள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய வகை மீன் ஆகும். பொதுவாக சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கின்றன.
இந்த நிலையில்தான் மீன் பிடி தடைக்காலத்தில் சென்னை கடல் பகுதிகளுக்கு ஒரு பெரிய முக்கிய விருந்தாளி வந்த சம்பவம் கடலிலியல் ஆய்வாளர்கள் இடையே கவனத்தை ஈர்த்து உள்ளது.
அதன்படி சென்னையில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளை திமிங்கல சுறாக்கள் பார்வையிட்டு உள்ளன. இவை உலகில் உள்ள மீன்கள் எல்லா வற்றிலும் மிகப்பெரிய வகை மீன் ஆகும். பொதுவாக சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கின்றன.
இவை ராட்சச தோற்றம் கொண்டது ஆகும். ஓய்ந்த மீன்கள் சுமார் 18 மீட்டர் (60 அடிகள்) நீளம் கொண்டது. ஒரு நாளைக்கு 2.6 டன் எடை உணவு உட்கொள்ளும். இவை சுமார் 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை. இவை கூட்டமாக வாழாமல் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன.
ஆனாலும் நகரும் போது கூட்டமாக நகரும் குணம் கொண்டவை. இவைதான் சென்னை கடற் பகுதிகளுக்கு திடீரென வந்துள்ளன. அவற்றை புலிகாட், செம்மஞ்சேரி, நீலாங்கரை, சின்னாண்டி, கோவளம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் பார்வையிட்டனர்.
ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 20 மீன்கள் இப்படி சென்னை கடல் பகுதிகளை பார்வையிட்டு உள்ளன. அதோடு அங்கேயே இந்த மீன்பிடி தடைக்காலம் முழுவதும் இவை தங்கி இருந்துள்ளன. மீன் பிடி தடைக்காலத்தில் சென்னை கடல் பகுதிகளுக்கு இந்த மீன்கள் வந்த வந்த சம்பவம் கடலிலியல் ஆய்வாளர்கள் இடையே கவனத்தை ஈர்த்து உள்ளது.
சென்னை கடல் பகுதிகள் சுத்தமாக இருப்பதை இது உணர்த்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டால்பின்: சமீப காலமாக சென்னையில் அரியவகை மீன்கள் பல தென்படுகின்றன. சென்னையை சுற்றி சுற்றி பல்வேறு கடற்கரைகள் இருக்கின்றன. இதில் சில மெரினா, பெஸ்ஸி போன்ற கடற்கரைகள் அதிக மக்கள் செல்லும் இடங்களாக உள்ளன. இந்த கடல் பகுதிகள் அசுத்தமாக இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்படும். இருந்தாலும் இந்த கடல் பகுதிகளை பாதுகாக்க, இங்கே இருக்கும் மீன் வளங்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்த பேமஸான கடற்கரைகள் போக மற்ற சில கடற்கரைகளுக்கு மக்கள் அதிகமாக செல்ல மாட்டார்கள். மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் செல்வார்கள். அதில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் போன்ற கடற்கரைகள் மக்கள் குறைவாக செல்லும் கடற்கரைகள் ஆகும்.
மாலை நேரங்களில் வாக்கிங் செல்ல சிலர் மட்டும் நீலாங்கரை செல்வது வழக்கம். அதேபோல் பிரபலங்கள் பலரின் வீடுகளும் நீலாங்கரை கடற்கரை பகுதியில்தான் அமைந்து உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் நேற்று நீலாங்கரை கடற்கரையில், கடலுக்கு நடுவே டால்பின்கள் தோன்றி உள்ளன. ஒன்று, இரண்டு என்று இல்லாமல் கூட்டம் கூட்டமாக 10க்கும் மேற்பட்ட டால்பின்கள் இங்கே வந்துள்ளன. கடல் கரைக்கு அருகே நீச்சல் போட்டுவிட்டு அதன்பின் மீண்டும் சென்றுள்ளன.
சென்னை கடற்கரை பகுதியில் டால்பின்கள் கடந்த 10 மாதத்தில் 4 முறை இவை மீண்டும் மீண்டும் தோன்றி உள்ளன. சமீபத்தில் ஈச்சம்பாக்கம் கடற்கரையில் டால்பின்கள் தோன்றியது குறிப்பிடத்தக்கது. நீலாங்கரையில் தோன்றிய டால்பின்களை மக்கள் பலர் ஆங்காங்கே பார்த்துள்ளனர்.
சென்னையில் பொதுவாக டால்பின்களை பார்ப்பது அரிது. டால்பின்கள் மிகவும் சுத்தமான கடல் நீர் பகுதியை விரும்ப கூடியவை. அந்த வகையில் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் டால்பின்கள் தென்படுவது ஒரு வகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications