விருந்து.. வலை விரித்த இளம் பெண்.. வகையாய் சிக்கிய ஏமாற்றிய இளைஞர்.. அடுத்து நடந்தது?
சென்னை : வருங்கால கணவர் தானே என்று ரூ.1.25 லட்சம் ரூபாயை தூக்கிக்கொடுத்துள்ளார் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆனால் ஆசையாய் பழகி அபேஸ் செய்து ஏமாற்றி உள்ளார் கோகுல கிருஷ்ணன் என்ற இளைஞர். மேட்ரிமோனியல் மூலம் பழகி திருமணம் செய்வதாக மோசடி செய்த அந்த இளைஞரை ஆசையாக விருந்துக்கு அழைத்து உறவினர்களுடன் சேர்ந்து இளம் பெண் அடித்து வெளுத்துள்ளார்.
இளம் பெண்ணிடம் வசமாக சிக்கி அடிவாங்கிய கோகுல கிருஷ்ணன் , கடைசியில் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். ராணி மற்றும் அவரது உறவினர்கள் கொடுத்த அடியால் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியை சேர்ந்தவர் ராணி(24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை கிண்டி ஈக்காட்டுதாலில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் வேலை செய்கிறார். இவருக்கு திருமணம் செய்வதற்கான மேட்ரிமோனியலில் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். ராணி தனது வருங்கால கணவரை பட்டதாரியான கோகுல கிருஷ்ணன் என்பவரை தேர்வு செய்ளதார்.

ஏமாற்றினார்
வருங்கால கணவர் தான் என்று நம்பி ராணியுடம் அவர் கேட்ட பணத்தை எல்லாம் கேட்டும் போதெல்லாம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற கோகுல கிருஷ்ணன் படிப்படியாக ராணிடயம் பேசுவதை நிறுத்தி வந்துள்ளார். மேலும் ராணிக்கு வேறு ஒருவருடன் நட்பு இருப்பதாக கூறி பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த ராணி கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்காமல் கோகுல கிருஷ்ணன் ஏமாற்றி வந்தாக சொல்லப்படுகிறது.

அழைந்த இளம் பெண்
இதனால் கடும் கோபம் அடைந்த ராணி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வருமாறு ஆசையாக பேசி கோகுல கிருஷ்ணனை அழைத்துள்ளார். அதை நம்பி கோகுல கிருஷ்ணன் கிண்டி அடுத்த ஜாபர்கான்பேட்டைக்கு வந்துள்ளார். அங்கு வந்த கோகுலகிருஷ்ணனை வீட்டுக்குள் அழைத்து சென்று வாங்கிய பணம் ரூ.1.25 லட்சத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்காமல் ராணிடயம் , ''என்னை தனியாக அழைத்து வந்து மிரட்டுகிறாயா..'' என்று கூறி அடித்ததாக சொல்லப்படுகிறது.

அலறல்
இதனால் ஆத்திரமடைந்த ராணி தன்னை தாக்குவதாக சத்தம் போட்டுள்ளார். இதனால் ஓடிவந்து கோகுல கிருஷ்ணனை தனது உறவினர்களுடன் சேர்ந்து அடித்து உதைத்துள்ளார். இதில் கோகுல கிருஷ்ணனுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. பிறகு பணத்தை ஏமாற்றிய கோகுல கிருஷ்ணனை ராணி கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தாக்குதலில் படுகாயமடைந்த கோகுல கிருஷ்ணனை போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவமனை அறிக்கையின் படி கோகுலகிருஷ்ணன் தன்னை தனியாக அழைத்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக ராணி உட்பட 3 பேர் மீது குமரன் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்

வைரல் வீடியோ
அந்த புகாரின் படி கோகுல கிருஷ்ணனை தாக்கிய ராணி மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ராணி தனது மேட்ரிமோனியல் காதலனை அடித்து உதைக்கும்போது உறவினர் உதவியுடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். '

உஷார் பெண்களே
அதிக பணம் சம்பாதிக்கிறேன். ஹைடெக் வேலை ஆள் ஸ்மார்ட்டாக இருக்கிறார் என்று மேட்ரிமோனியலில் வரும் விளம்பரங்களின் உண்மை தன்மையை முழுமையாக யோசிக்காமல் பழகினால் இதுபோன்ற கண்ணன்களிடம் சிக்கி சீரழியும் நிலை உருவாகலாம். பணம், பாலியல் வன்கொடுமை போன்ற ஏமாற்றங்களில் இருந்து தப்பிக்க பெண்மேட்ரிமோனியலில் வரும் தகவல்களை அப்படியே நம்பக்கூடாது என்ற சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications