அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மறு நியமனம்.. மாணவர்களுக்காக அரசு எடுத்த முக்கிய முடிவு
சென்னை: தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு பணி ஓய்வு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெற்றால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் கல்வி ஆண்டின் இறுதியில் அதாவது மே 31 ஆம் தேதி வரை ஓய்வு பெறுவோர் பணியாற்ற வேண்டும் என ஆணை வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும் பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஓய்வு பெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications