மிக்ஜாம்: இதெல்லாம் முன்னாடியே தெரியாதா? மழைநீரில் எண்ணெய் கழிவு கலந்த வழக்கு.. நீதிபதி சரமாரி கேள்வி
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது வடசென்னையின் எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் வெள்ளத்தோடு சேர்ந்து கச்சா எண்ணெய்யும் கலந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர்.
கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.

வடசென்னையின் பட்டாளம், அம்மையம்மன், திருவொற்றியூரின் சில பகுதிகள், மணிலியின் ராஜீவ்காந்தி நகர் என பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் சீராக வழங்கப்படவில்லை. இன்று இந்த பகுதிகளில் மின் விநியோகம், குடிநீர், பால் விநியோகம் சீரடைந்திருக்கிறது. ஆனால் எர்ணாவூர் மக்கள் மற்றொரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர். அதாவது மழை வெள்ளத்தோடு கச்சா எண்ணெய் கழிவுகள் சேர்ந்து வீடுகளை சூழ்ந்திருக்கிறது.
இங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் வெள்ளம் புகுந்த நிலையில் அதை வெளியேற்றும் போது எண்ணெய் கழிவுகளும் வெளியேறியுள்ளது. இந்த எண்ணெய் கழிவால் பொதுமக்கள் கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். மட்டுமல்லாது எண்ணெய் எரியும் தன்மை கொண்டதால் மக்கள் வீடுகளில் சமைக்கவே அச்சப்படுகின்றனர்.
மறுபுறம் கச்சா எண்ணெய் கடலிலும் கலந்திருக்கிறது. இது தொடர்பாக கொடுங்கையூரில் ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் வெளியேற்றப்பட்டபோது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது என்று விளக்கமளித்துள்ளது.
கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன் வளம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேற்று தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையில் தொடங்கியபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக ஆய்வு செய்து நாளை பதிலளிப்பதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது. சிபிசிஎல் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். விசாரணையில் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதாவது, பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திலிருந்து என்னை கசியவில்லை என்றும் தரையில் தேங்கி இருந்த எண்ணெய் கழிவுகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறது என்றும் வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர்.
இதைக் குறிக்கீடு செய்த நீதிபதிகள் இதுபோன்று நடக்கும் என்று ஏற்கனவே உங்களுக்கு தெரியாதா? நீங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும்தான் என்னை கசிவு நடந்திருப்பதாக கூறி இருக்கிறீர்கள். ஆனால் எண்ணூர் முகத்துவாரப் பகுதி, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு என பல்வேறு பகுதிகளில் மீன் பிடி ஆதாரம் உள்ள இடங்களில் எண்ணெய் கழிவுகளை காண முடிகிறது. இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏன் தமிழக அரசு இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை? மாவட்ட ஆட்சியரும் வருவாய்த் துறையினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஐந்து கிலோமீட்டர் தூரம் அளவுக்கு எண்ணெய் கழிவுகள் மழை வெள்ளத்தில் கலந்த பின்னர் தான் இந்த விவகாரம் தெரிய வந்திருக்கிறது என்று சொன்னால், எண்ணெய் நிறுவனங்கள் என்ன மாதிரியான பேரிடர் தடுப்பு திட்டத்தை வைத்திருக்கின்றன? என பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications