கருமுட்டை முறைகேடு.. சீல் வைக்கப்பட்ட சுதா மருத்துவமனைக்கு ஈரோடு பிற மருத்துவமனைகள் ஆதரவு.. ஸ்ட்ரைக்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக ஈரோடு சுதா மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் சீல் வைத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவமனை சார்பில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் சீலை அகற்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு அரசு சீல் வைத்தது செல்லும் என்று தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தனக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தபோது கணவனை விட்டுப் பிரிந்து விட்டார். பின், வேறு ஒருவருடன் இரண்டாவதாக திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே இளம்பெண்ணின் மகள் 16 வயதினை எட்டியநிலையில், இளம் பெண்ணின் ஆண் நண்பர் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

8 முறை கருமுட்டை விற்பனை

8 முறை கருமுட்டை விற்பனை

இந்நிலையில் அந்த இளம்பெண், தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் அச்சிறுமியின் பெயர் மற்றும் வயதை ஆதாரில் போலியான ஆவணங்கள் மூலம் தயாரித்துக் கொண்டு ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிறுமியின் கருமுட்டையை 8 முறைக்கு மேல் விற்பனை செய்து வந்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

சொந்த தாய் மற்றும் அவரின் ஆண் நண்பர் செய்த கொடுமையை தாங்க முடியாமல் சிறுமி தப்பி சென்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை. விசாரணையில் தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள சுதா மருத்துவமனை, ஒசூரில் உள்ள விஜய் மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள ராமபிரசாத் மருத்துவமனை, கேரளாவில் உள்ள மற்றொரு மருத்துவமனை என மொத்தம் 5 மருத்துவமனைகள் ஒரு கருத்தரிப்பு மையம் ஆகியவை இந்த சம்பவத்தில் தொடர்புடைய உறுதி செய்யப்பட்டது.

3 முக்கிய மருத்துவமனைகளுக்கு சீல்

3 முக்கிய மருத்துவமனைகளுக்கு சீல்

இந்நிலையில், கடந்த மாதம் 15 தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள சுதா மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள ராமபிரசாத் மருத்துவமனை மற்றும் ஒசூரில் உள்ள விஜய் மருத்துவமனை ஆகியவற்றிக்கு சீல் வைக்கப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுதா மருத்துவமனை சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு அரசு சீல் வைத்தது தவறு என்றும், எனவே மீண்டும் மருத்துவமனை பழைய நிலையில் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சீல் வைத்தது சரி என்ற ஹைகோர்ட்

சீல் வைத்தது சரி என்ற ஹைகோர்ட்

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை ரத்து செய்து சீலை அகற்றி மருத்துவமனை இயல்பாக இயங்குவதற்கு அனுமதியளித்தார். இதனையடுத்து மருத்துவமனை இயல்பாக இயங்கி வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் செல்லும் என்று தீர்ப்பளித்து மருத்துவமனைக்கு சீல் வைத்தது சரியானது எனக்கூறியது. இதனையடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட மருத்துவமனைகள் ஸ்ட்ரைக்

ஈரோடு மாவட்ட மருத்துவமனைகள் ஸ்ட்ரைக்

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் கையில் கிடைக்காத நிலையில் அவசர அவசரமாக ஒட்டுமொத்த மருத்துவமனைக்கும் சீல் வைத்தது தவறான நடவடிக்கை என தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில் இன்று(ஆகஸ்ட் 6) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக இன்று புறநோயாளிகள் பிரிவு உட்பட மொத்தமாக மருத்துவமனைகள் செயல்படாமல் ஊழியர்கள் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் மொத்தம் 250 தனியார் மருத்துவமனைகள் உள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தப்போராட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+