டார்கெட் உதயநிதி! "லிப்ட்" கேட்டு பாஜக போன செல்வம்.. திரும்பி திமுக வந்ததும்! என்ன பேசுறார் பாருங்க!
சென்னை: திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு பாஜக கட்சிக்கு போன கு. க செல்வம் மீண்டும் திமுகவுக்கு வந்துள்ளார். பாஜகவினர் இடையே கு. க செல்வம் எடுத்த இந்த முடிவு பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக உறுப்பினராக ஆயிரம் விளக்கு எம்எல்ஏவாக இருந்தவர் கு. க செல்வம். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தார்.
இதனால் திமுக தலைமை இவர் மீது கோபம் அடைந்தது. உடனே இவரை கட்சியை விட்டு திமுக நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.

நட்டா
அப்போது இது பற்றி பேசிய கு. க செல்வம் நான் அரசியல் ரீதியாக நட்டாவை சந்திக்கவில்லை. இது தொகுதி ரீதியான சந்திப்பு. என்னுடைய ஆயிரம் விளக்கு தொகுதி ரயில் நிலையத்தில் லிப்ட் இல்லை. ரேயோல் நிலையத்திற்கு லிப்ட் கேட்டுதான் நான் நட்டாவை சந்தித்தேன் என்று கு. க செல்வம் குறிப்பிட்டார். ஆனால் அப்போதே இவர் பாஜகவில் இணைந்து விடுவார் என்று கூறப்பட்டது.

லிப்ட் கு க செல்வம்
அதேபோல் சட்டசபையில் திமுகவிற்கு எதிராக அதிருப்தி உறுப்பினராக இவர் செயல்பட்டு வந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் கு. க செல்வம் மீண்டும் போட்டியிட விரும்பினார். ஆனால் இந்த தொகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு செல்ல வாய்ப்பு இருந்ததாக தகவல்கள் வந்தன. இதனால் கோபம் அடைந்து கு. க செல்வம் பாஜகவிற்கு சென்றதாக கூறப்பட்டது.

உதயநிதி
திமுகவை விட்டு நீக்கிய பின் கோபமாக உதயநிதியை விமர்சனம் செய்து இதனால் கு. க செல்வம் பேட்டி அளித்தார். அதில், ஆயிரம் விளக்கில் ஏற்கனவே திமுக தோல்வி அடைந்துள்ளது. இந்த தொகுதியில் ஸ்டாலின் தோற்றுள்ளார். திமுக எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். ஒவ்வொருவராக என்னுடன் பாஜகவில் இணைவார்கள். உதயநிதி ஸ்டாலின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

குஷ்பு
வாரிசு அரசியலுக்கு திமுகவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. அவரின் ஆதிக்கம்தான் நான் திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய காரணம் என்று கு.க செல்வம் உதயநிதியை டார்கெட் செய்து கடுமையாக பேட்டி அளித்து இருந்தார். ஆனால் கு. செல்வம் அஞ்சியது போல ஆயிரம் விளக்கில் உதயநிதி தேர்தல் போட்டியிடவில்லை. அதேபோல் பாஜகவில் இணைந்த கு. க செல்வதிற்கு ஆயிரம் விளக்கு தொகுதியும் தரப்படவில்லை.

செல்வம் அதிருப்தி
அங்கு குஷ்புதான் போட்டியிட்டார். இதனால் அப்போதே கு. க செல்வம் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. பாஜகவில் ஒன்றரை வருடமாக இருந்த செல்வத்திற்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் கொடுக்கப்படவில்லை. மாநகராட்சி தேர்தலிலும் செல்வத்தின் ஆட்களுக்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே இப்போது பாஜகவில் இருந்து வெளியேறி செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.
Recommended Video

மீண்டும் திமுக
திமுகவில் இணைந்த கு.க செல்வம் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கு.க செல்வம் அளித்த பேட்டியில், தாய் வீட்டிற்கு வந்த உணர்வோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் செயல்படுவேன். மீண்டும் திமுகவில் சேர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவால் ஒரு போதும் வளரவே முடியாது. தமிழ்நாட்டை பாஜக தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. நீட் பிரச்சனையில் தமிழ்நாட்டின் கோரிக்கையை பாஜக கேட்கவில்லை. தமிழ்நாட்டை பாஜக ஆளவே முடியாது என்று பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு கு. செல்வம் திமுகவில் மீண்டும் ஐக்கியம் ஆகி உள்ளார்.












Click it and Unblock the Notifications