பணமதிப்பிழப்பு.. பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம்.. 5 பேரின் எப்ஐஆர் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த 2016ல் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் கோரி அவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நீதிமன்றமும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையில் 5 பேர் மீதான எஃப்ஐஆரை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

போராட்டத்தின் போது வெறும் கோஷங்களை எழுப்பியதாகவும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும் நீதிமன்றம் காவல்துறையின் எஃப்ஐஆரை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளது. அதேபோல அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்படவில்லையென்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications