அடுத்த 3 மணி நேரம்! இத நோட் பண்ணுங்க.. சோளிங்கர் டூ திருவொற்றியூர் வரை! மழை குறித்த முக்கிய அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் சமீபத்தில் உருவான மாண்டஸ் புயலானது கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாமல்லபுரத்தையொட்டி கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அதேபோல கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனையடுத்து சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மழை
இன்று அதிகாலை நிலவரப்படி சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்த அளவில், அதிகாலை 3-4 மணியளவில் கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், ரெட்டேரி, மாதாவரம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சென்டரல், எழும்பூர், திருவல்லிக்கேணி, மைலாபூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் என பரவலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை போன்ற வட மாவட்டங்களிலும், ஒருசில தென் மற்றும் உள் மாவட்டங்களிலும் விடிய விடிய மழை பெய்துள்ளது. இதனையடுத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை
வட மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையை பொறுத்த அளவில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சோளிங்கர் தொடங்கி திருவொற்றியூர் வரை மிதமான மழை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அடுத்த மூன்று மணி நேரத்தை பொறுத்த அளவில்..
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னையையொட்டிய பகுதிகளான கும்மிடிப்பூண்டி, மதுராந்தகம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், மயிலாப்பூர், பூவிருந்தவல்லி, புரசைவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை பொறுத்த அளவில், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், திருக்கழுகுன்றம் உத்திரமேரூர், குன்றத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்த அளவில், ஆற்காடு, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்
ஒட்டுமொத்தமாக இன்று தொடங்கி அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் லேசானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல நாளை வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் நாளை வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது வங்கக் கடலில் வரும் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இது அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் மாறி வட தமிழ்நாட்டையொட்டிய பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம்
9 கி.மீ நீளம் கொண்ட இந்த ஏரியின் கரையில் மொத்தமாக 19 சிறிய மதகுகள் மற்றும் 5 பெரிய மதகுகள் இருக்கின்றன. இதிலிருந்து திறந்துவிடப்படும் நீர், குன்றத்தூர், திருநீர்மலை ஆகியவற்றை கடந்து ராமாபுரம், ஈக்காட்டுதாங்கல், கோட்டூர்புரம் என அடையாறு வழியாக இந்நீர் கடலில் கலக்கும். எனவே இந்த பகுதியில் கரையோரம் இருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல மழை தொடர்வதால் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

விடுமுறை
மழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லையென்றாலும் சென்னையையொட்டியுள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை பொறுத்த அளவில், காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications