சூழும் மழை மேகங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் 7 கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம்(ஜன.27) உருவானது. இதன் காரணமாக ஜனவரி 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் பரவலான பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு வங்கக்கடலிலிருந்து மெல்ல மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி 27ம் தேதி உருவானாலும் தமிழ்நாட்டில் ஜன.27,28 ஆகிய தேதிகளில் எங்கும் மழைப்பொழிவு ஏற்படவில்லை. ஆனால் இன்று(ஜன.29) முதல்தான் மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
குறிப்பாக கடலோர மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் அடுத்த மூன்று மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், இன்று பூமத்திய ரேகையையொட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகள், அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே சுமார் 55 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும்,

எனவே இன்று இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்த அளவில் பெரும்பாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், 30ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெல்ல மெல்ல வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 1ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் பின்னர் இலங்கை கடற்பகுதியை சென்றடையும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications