தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு.. “இரண்டுமே” நமக்கு முக்கியம்.. தமிழிசை ‘பளிச்’!
சென்னை : தமிழ்நாடு என்கிற பெயருக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. அதை தமிழர்களாக காப்பாற்ற வேண்டியது நம் கையில் தான் உள்ளது. ஒரு கருத்தை சொன்னால் அந்த கருத்தை நாகரிகமாக எதிர்க்கொள்ள வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது. கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால், மோதல் இருக்கக்கூடாது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
முதல்வர் விமர்சிக்க வேண்டாம் என்று கூறியும் தமிழ்நாடு ஆளுநரை இணையதளங்களில் தவறாக விமர்சிக்கிறார்கள். ஆளுநர் பற்றி அவதூறு பேசுவதை கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆளுநர் சர்ச்சை
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகளுக்கு திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சட்டமன்ற கூட்டத்தின்போது ஆளுநர் - திமுக அரசுக்கு இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது. தொடர்ந்து, ஆளுநர் அவை மரபை மீறியதாக திமுகவினர் குற்றம்சாட்டினர். தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று அழைப்பதே சரி என்று கூறிய ஆளுநரை விமர்சித்து சமூக வலைதளங்களிலும் திமுக உள்ளிட்ட கட்சியினரும் நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை - பொங்கல்
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று முழக்கங்களை எழுப்ப பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பின்னர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

முதல்வர் சொல்லியும் கேட்கவில்லை
அப்போது பேசிய அவர், "சிறிய கருத்து வேற்றுமை வந்தவுடன் கருத்துக் கூறியவர்களைக் கடுமையாக விமர்சிப்பது அவர்கள் மீது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது இணையதளங்களில் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பது ஆகியவற்றை எல்லாம் கைவிட வேண்டும். நாகரிகத்தோடு வரம்பு மீறாமல் விமர்சனம் செய்ய வேண்டும். முதல்வர் விமர்சிக்க வேண்டாம் என்று கூறியும் தமிழ்நாடு ஆளுநரை இணையதளங்களில் தவறாக விமர்சிக்கிறார்கள்.

இரண்டுமே முக்கியம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆளுநரை விமர்சித்து அவதூறு பேசுவதை கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒத்த கருத்துடன் எல்லோரும் செயல்பட முடியாது. ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள். தமிழகம், தமிழ்நாடு இரண்டு வார்த்தைகளுமே முக்கியம். இரண்டையுமே தொடர்ந்து பயன்படுத்தியுள்ளோம். தமிழருக்கு என்று நாகரிகம் இருக்கிறது.

நீண்ட வரலாறு
தமிழ்நாடு என்ற பெயருக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. காமராஜர் காலத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு அறிஞர் அண்ணா காலத்தில் சட்டமாக்கப்பட்டது. நாம் நமது பெருமையையும் உரிமையையும் மரியாதையையும் தமிழர்களாக இருந்து நாம் எப்படி இதைக் காப்பாற்றப் போகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. இணையத்தில் வார்த்தைப் பிரயோகம் மிக மோசமாகி வருகிறது.

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது
ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது. நான் எதாவது கருத்து சொன்னாலும் தம்பிகள் குதிப்பார்கள். நீ இந்தி இசையா, டாக்டருக்கு உண்மையாகவே படிச்சியா என்று கேட்பார்கள். ஒரு கருத்து சொன்னால் நாகரீகமாக அதை எதிர்கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் வரம்பு மீறாமல் விமர்சனம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும். கருத்து மோதலாக இல்லாமல் கருத்து பரிமாற்றமாக இருக்க வேண்டும். பொங்கல் எப்படி இனிமையாக உள்ளது. அதேபோல இணையதளங்களில் வார்த்தைகள் இனிமையாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன?












Click it and Unblock the Notifications