தமிழ்நாட்டில் 9 ரக நாய்களை இனப்பெருக்கம் செய்ய தடை.. அரசின் நாய் வளர்ப்பு கொள்கை என்ன?
சென்னை: தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வளர்ப்பு நாய்களை உரிமையாளர் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு இணையதளத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் குளிர் பிரதேசங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 9 ரக நாய்களை இனி இனப்பெருக்கம் செய்ய தடை என்ற விதிமுறையை புதிய தமிழ்நாடு நாய் வளர்ப்பு கொள்கை வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் செல்லப்பிராணிகளாக பூனை, நாய், கிளி, புறா உள்ளிட்ட விலங்குகளை வளர்க்கிறார்கள். இதில் முதல் இடத்தில் நாய் இருக்கிறது. அடுத்த இடத்தில் பூனை இருக்கிறது. பூனைகளால் மனிதர்கள் தாக்கப்படுவது மிக அபூர்வமானது.. ஆனால் நாய்களால் தாக்கப்படுவது தினசரி வாடிக்கையாக உள்ளது.

நாய்கள் செல்லப்பிராணியாக மட்டுமில்லாமல் காவல் காக்கும் உயிரினமாகவும் உள்ளது. நாய்கள் தங்கள் எஜமான் வீட்டில் உள்ளவர்களிடம் அதிக பாசம் காட்டுபவை. நாய்களை பாதுகாப்பிற்காக மட்டுமின்றி சிலர் அழகுக்காக, சிலர் விளையாட்டுக்காகவும், சிலர் பந்தாவிற்காகவும் நாய்களை வாங்கி வளர்க்கின்றனர். வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்ப்பது என்பது பணக்கார வீடுகளின் கலாச்சாரங்களில் ஒன்றாக இன்றைக்கு மாறி உள்ளது..
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான நாய்கள் தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன.. நாட்டு நாய்களை விடவும் வெளிநாட்டு நாய்களை வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள், இவற்றில் பல நாய் இனங்களுக்கு நம் தமிழகத்தில் உள்ள தட்ப வெப்ப நிலை ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது. இந்த காரணங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசின் புதிய வரைவு கொள்கை, குளிர் பிரதேசங்களை சேர்ந்த 9 நாய்களை தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் (Breeding) செய்ய தடை செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வளர்ப்பு நாய்களுக்கான தனிக் கொள்கையை தமிழக அரசு தயாரித்து வரும் நிலையில்,'. இதற்கான வரைவு அறிக்கை, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாசெட் ஹவுண்ட் (Basset Hound), பிரஞ்சு புல்டாக் (French Bulldog), அலாஸ்கன் மலாமுட் (Alaskan Malamute), கீஷொண்ட் (Keeshond), நியூஃபவுண்ட்லாந்து (Newfoundland), நார்வே எல்கவுண்ட் (Norwegian Elkhound), திபெத்திய மாஸ்டிஃப் (Tibetan Mastiff), சைபீரியன் ஹஸ்கி (Siberian Husky), செயின்ட் பெர்னார்ட் (Saint Bernard) ஆகிய 9 நாய் இனங்கள் இந்திய தட்பவெப்பம் போன்ற சூழலை தாக்குப்பிடிக்கக் கூடியதாக இல்லை. எனவே, அதுபோன்ற குளிர் பிரதேச நாய் இனங்களை வளர்ப்பதற்கு கண்டிப்பாக தடை விதிக்கப்படும்.
வளர்க்க உள்ள குறிப்பிட்ட நாய்கள் குறித்த விவரங்களை, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். நாய்களின் உடல்நிலை குறித்த சான்றிதழை விலங்குகள் நல வாரியம் வழங்கும். நாய்களுக்கான உரிமையாளர்கள் குறித்த விவரங்கள், விலங்குகள் நல வாரியத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
நாய் வளர்ப்போர் அனைவரும் அதை வளர்க்கும் முறை, உணவு, இனப்பெருக்கம், செயல்பாடு பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதன் மனம் மற்றும் உடல் நிலை பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வளர்ப்பு நாய்களுக்கான உடல் நலனை கால்நடை மருத்துவர் மூலமாக அடிக்கடி சோதித்து பார்க்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை நாய்கள் அழகாக இருக்கிறது என்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வாங்கி விடுகிறார்கள் . ஆனால், ஐரோப்பா, கனடா போன்ற மிக குளிர் அதிகமான பகுதிகளில் வளர்ந்த நாய்களுக்கு' 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருக்க வேண்டிய நிலை வருகிறது. மைனஸ் டிகிரியில் இருக்கும் குளிர் பிரதேசங்களில் இருந்து வந்த நாய்களை சாதாரண கிளைமேட்டில் வைக்க முடியாத நிலை இருக்கிறது. இதன் காரணமாகவே குளிர் பிரதேச நாய் இனங்களை வளர்ப்பதற்கு தமிழக அரசு தற்போது தடை விதித்துள்ளது.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications