புயல், வெள்ளத்தை விடுங்க.. சத்தமின்றி சென்னைக்கு நடந்த நல்ல விஷயம்.. அடுத்த 1 வருஷம் சிக்கல் இல்லை
சென்னை: சென்னையில் பெய்த மிக கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அடுத்த ஒரு வருடத்திற்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. சென்னைக்கு அடுத்த மழைக்காலம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.

ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், ஐடி ஏரியா பகுதிகள் மொத்தமாக இன்னும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இந்த பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவில்லை. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளம் வடியாத பகுதிகள்: கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.
மீளும் சென்னை: மேலும் இது 2015ஐ விட மோசமான வெள்ளம். 2015ஐ விட மோசமான மழை. ஆனாலும் சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந்தது. பல ஏரியாக்கள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே காரணம்.. இந்த வடிகால் அமைப்புகள்தான்.

இந்த வடிகால் அமைப்புகள் மட்டும் இல்லை என்றால் சென்னை மிக கடுமையான சூழ்நிலையில் சிக்கி தவித்து இருக்கும். இப்போதும் கூட வடிகால்கள் இல்லாத இடங்களில்தான் மக்கள் கடுமையாக சிக்கி தவித்து வருகின்றனர்.
ஒரே நல்ல விஷயம்: சென்னையில் பெய்த மிக கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அடுத்த ஒரு வருடத்திற்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. சென்னைக்கு அடுத்த மழைக்காலம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு - 89.75% ஆக உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 10.552 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
💧செம்பரம்பாக்கம் - 90.1% தண்ணீர் இருப்பு உள்ளது.
💧புழல் - 92.54% தண்ணீர் இருப்பு உள்ளது.
💧பூண்டி - 90.5% தண்ணீர் இருப்பு உள்ளது.
💧சோழவரம் - 73.08% தண்ணீர் இருப்பு உள்ளது.
💧கண்ணன்கோட்டை - 100% தண்ணீர் இருப்பு உள்ளது.
இதனால் சென்னைக்கு இப்போதைக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications