அடிதூள்.. இனி ரிங் ரோட்டில் 120 கிமீ வேகத்திலும் பறக்கலாம்.. வந்தது புது ரூல்.. இதை முதல்ல படிங்க
சென்னை: சென்னை அவுட்டர் ரிங் சாலையில் இனி 120 கிமீ வேகத்தில் கூட செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
சென்னையில் கார், பைக் ஓட்டும் நபர்களுக்கு முக்கியமான அறிவுரை சமீபத்தில் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பாக வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் வழக்கு பாயும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பகலில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் ஓட்ட கூடாது. அதேபோல் இரவில் 50 கி.மீ. வேகத்தை கடந்து வாகனம் ஓட்ட கூடாது. மீறி ஓட்டினால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதற்காக ஆட்டோமெட்டிக் ரேடார் கருவி சாலை ஓரங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் வாகனங்கள் ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு நகரும் வேகம் கணக்கிடப்படும்.
அதை வைத்து வாகனங்களின் வேகம் கணக்கிடப்படும். இதை வைத்து 40 கிமீ வேகத்திற்கும் அதிகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில்தான் சென்னை அவுட்டர் ரிங் சாலையில் இனி 120 கிமீ வேகத்தில் கூட செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
இதுவரை, 4 லேன் கொண்ட ORR இல் வேக வரம்புகள் இரண்டு லேன்களில் மணிக்கு 80 கிமீ ஆகவும், மற்ற இரண்டு ஸ்பீட் லேன்களில் மணிக்கு 100 கிமீ ஆகவும் இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை அவுட்டர் ரிங் சாலையில் இனி 120 கிமீ வேகத்தில் கூட செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2017ல் இருந்து கடந்த 6 வருடங்களாக இங்கே இருந்த 100 கிமீ வேக லிமிட் மாற்றப்பட்டு உள்ளது.
தீவிரமாகும் கண்காணிப்பு: இது போக இப்படி விதிகளை மீறி செல்பவர்களுக்கு அபராதம் அளிப்பதற்காக சாலைகளில் இருக்கும் அனைத்து சந்திப்புகளில் இனி கேமரா பொருத்தப்படும். அதேபோல் ஸ்பீடோ கன் ஒன்றும் பொருத்தப்படும். நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் கேமரா பொருத்தப்படும்.போக்குவரத்து போலீசார் தங்களின் உடலில் கேமரா பொருத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம் போக்குவரத்து விதி மீறல்கள் ரெக்கார்ட் செய்யப்படும்.
போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் இனி கேமரா இருக்கும். இதனால் போலீஸ் சேசிங் அல்லது இரவு நேர ரோந்துகளில் போலீஸ் முக்கிய விஷயங்களை ரெக்கார்ட் செய்ய முடியும்.இது போக சாலைகளில் வேகமாக வாகனம் செல்லும் போது அதை எளிதாக கண்டுபிடிக்க தானியங்கி வண்டி எண் அறியும் தொழில்நுட்பம் கொண்ட சென்சார்கள் சந்திப்புகளில் பொருத்தப்படும்.
அதேபோல் சாலையில் பல்வேறு விதி மீறல் செய்யும் நபர்களை கேமரா மூலம் கண்காணித்து அவர்கள் நம்பர் பிளேட்டை வைத்து தானாக அபராதம் விதிக்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட உள்ளது.இந்த அபராதத்தை போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே விதிக்க முடியும். உங்களை அவர்கள் பார்க்கக் வேண்டிய அவசியம் இல்லை.
அதாவது நீங்கள் சாலையில் ஹெல்மெட் இன்றி செல்கிறீர்கள். போலீசார் சாலையில் இல்லை என்றால் கேமரா உங்களை பதிவு செய்யும். பின்னர் பைக் நம்பரை வைத்து உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சென்னையில் உள்ள இந்த வசதி தமிழ்நாடு முழுக்க கொண்டு வரப்பட உள்ளது. மெயில், போன் மெசேஜ் மூலம் இந்த அபராத செல்லான் செலுத்தப்படும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications