காஞ்சிபுரம் பள்ளி ஆசிரியருக்கு பல லட்சத்தில் வீடு கட்டி கொடுத்த பள்ளியின் உரிமையாளர்.. பேட்டி
சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் உரிமையாளர், பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளார். நீண்ட நாட்களாக வேலை செய்யும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக வீடுகளை தான் கட்டிக் கொடுப்பதாகவும், "நம்ம கூட இருக்குறவங்கள நாம பார்த்துகிட்டா.. நமக்கு மேல இருக்குறவன் நம்மள பார்த்துப்பான்" என்றும் காஞ்சிபுரம் பள்ளியின் உரிமையாளர் பேட்டியில் கூறினார்.
என்ன தான் பணம் சம்பாதிக்க வேண்டும், நிறைய சொத்து சேர்க்க வேண்டும் என்று இன்று பலர் ஓடிக்கொண்டிருந்தாலும், சிலர் தான் சம்பாதித்த பணத்தில் தான் மட்டும் நல்ல நிலையில் இருந்தால் போதும் என்று நினைக்காமல், தன்னை சுற்றியுள்ளவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தான் சம்பாதித்த பணத்தில் நிறைய நல்ல காரியங்களை செய்கிறார்கள்.

அந்த வகையில் பெரிய நிறுவனங்களை நடத்தும் பலர், கார், பைக் வாங்கி கொடுப்பார்கள். சிலர் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பார்கள். சிலர் மருத்துவ செலவிற்கு பணம் தருவார்கள். ஒரு சில பிரபலங்கள் நல்ல சம்பளம், நிரந்தர வேலை என கொடுத்தாலும், அவர்களுக்கு சொந்தமாக வீடும் கட்டிக் கொடுப்பார்கள்.
பெரிய திரைப்பிரபலங்கள் வீடு கட்டி கொடுத்திருப்பதை பார்த்திருப்பீர்கள், சில பெரிய தனியார் நிறுவன உரிமையாளர்களும் வீடு கட்டி கொடுத்துள்ளார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளர் தன்னிடம் வேலை செய்யும் ஆசிரியருக்கு பல லட்சம் செலவு செய்து வீடு கட்டி கொடுத்துள்ளார்.
தனியார் பள்ளியின் உரிமையாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், எங்கள் பள்ளியில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியருக்கு பல லட்சம் செலவு செய்து வீடு கட்டிக் கொடுத்துள்ளோம். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.. அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து வீடு கட்டிக் கொடுத்திருக்கிறோம். இன்று அவர்களிடம் வீட்டை ஒப்படைத்துள்ளோம்.
அது மட்டுமின்றி 10 வருடம் அவார்டு வாங்கிய பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டில் நிலம் வாங்கி ரிஜிஸ்டர் செய்து தருகிறோம்... அதேபோல் விருது வாங்கிய 350 பிள்ளைகளை பெற்றோருடன் விமானத்தில் அழைத்து சென்றுள்ளோம். நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது.. நம்மை சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும்.. நம்ம கூட இருக்குறவங்கள நாம பார்த்துகிட்டா.. நமக்கு மேல இருக்குறவன் நம்மள பார்த்துப்பான்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications