சாலைகளை தோண்டி தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்க வேண்டும்.. போலீசுக்கு அறிவுறுத்தல்
சென்னை: சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடக்கத்தில் நடைபெற போகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் இறுதியில் வெளியாகும் என தெரிகிறது. தேர்தலுக்கு 4 மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்கு முன்பு சாலைகளில் கொடி கம்பங்கள் நடுவார்க்ள. இந்நிலையில் சாலைகளில் தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க, மூன்று நாட்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன. எல்லா கட்சிகளும் ஊர் ஊராக போய் பிரச்சாரம் செய்கின்றன. இதற்காக பிளக்ஸ் பேனர் வைப்பது, கொடி கம்பங்கள் ஊண்டுவது, சாலைகளில் தற்காலிகமாக கம்பங்கள் நிறுவ கொடிகளை நடுவது, சுவரொட்டி ஒட்டுவது, ரோடு ஷோ செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, வீடு வீடாக செல்வது என பல்வேறு வழிகளில் பிரச்சாரத்தை கையில் எடுத்துவிட்டன. இதில் கொடி கம்பம் தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரங்களை பார்ப்போம்.
* தற்காலிகமாக கொடி கம்பங்கள் நிறுவ, நிகழ்ச்சிக்கு ஏழு நாட்களுக்கு முன், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோட்ட அளவிலான துணை குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
* தற்காலிக கொடி கம்பங்களின் எண்ணிக்கை, கொடி கம்பம் மற்றும் கொடிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
* கொடி கம்பங்களுக்கு இடையிலான இடைவெளி, கொடி கம்பங்கள் நிறுவப்படும் இடம் மற்றும் பகுதியை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
* தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க, நிகழ்வுக்கு முந்தைய நாள், நிகழ்வின் நாள் மற்றும் அதன் பிந்தைய நாள் என, மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
* சாலை கட்டமைப்புகளின் மீது, அதாவது மைய நடைபாதை, வடிகால், பாலங்கள் மீது தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.
* தற்காலிக கொடி கம்பத்தின் அதிகபட்ச உயரம், தரைமட்டத்தில் இருந்து 3.50 மீட்டராக இருக்க வேண்டும்.
* மின்சாரம் தாக்குவதை தடுக்க, கொடி கம்பத்தின் மேல்முனையை, பொருத்தமான காப்பு பொருட்களால் மூட வேண்டும்.
* ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், கொடி கம்பங்களை அமைத்தவர்களே முழுப்பொறுப்பு. விபத்து நடந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
* தற்காலிகமாக கொடி கம்பங்களை நிறுவுவதற்கு கட்டணம் உண்டு.
* தற்காலிக கொடி கம்பங்களை, அனுமதி காலம் முடிந்தவுடன் அமைப்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் உடனடியாக அகற்ற வேண்டும்.
* சாலை தடுப்பு மையம் மற்றும் பிற தடை செய்யப்பட பகுதிகளில் தற்காலிக கொடி கம்பங்கள் வைத்தால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக, காவல் துறை வாயிலாக வழக்குபதிவு செய்ய வேண்டும் " இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக!












Click it and Unblock the Notifications