ரூ.9000 மாதம் கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. அதிக வட்டி தரும் சூப்பரான சேமிப்பு திட்டம் பாருங்க
சென்னை: நிலையான வைப்பு (FDs) போன்ற பிற நிலையான வருமான ஆதாரங்களை விட அதிக வட்டி தரும், போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி தெரியுமா? முதிர்வு காலத்தில் நிரந்தர வருமானம் தரும் ஓய்வூதிய திட்டத்தின் ஸ்பெஷாலிட்டிகள் என்னென்ன தெரியுமா
பணப்பாதுகாப்பு என்பது தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.. அதனால்தான், சேமிக்க விரும்புவர்களுக்காகவே பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் துவங்கி நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு எப்போதுமே உள்ளது.

அரசுடைமை: இதற்கு காரணம், தபால் நிலையம் அரசுடையது.. நாம் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்கும்.. உத்தரவாத வருமானம் கிடைக்கும்.. வட்டியும் நியாயமாகவே இருக்கும்.
அந்தவகையில், போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில், மாதாந்திர வருமானம் தரும் சூப்பர் திட்டமும் உள்ளது. அரசு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.. ஆனால், மற்ற தனியார் ஊழியர்களுக்கு அப்படியில்லை.. எனவே, ஓய்வுக்கு பிறகு வருமானம் தரும் சேமிப்பு திட்டம்தான் இதுவாகும்.
வட்டி விகிதம்: இந்த போஸ்ட் ஆபீஸ் மாதந்திர வருமான திட்டத்தில் ஒருமுறை மட்டுமே முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியின் அடிப்படையில் மாதந்திர வருமானம் பெறலாம்..
அதன்படி, ஒரேடியாக ரூ. 9 லட்சத்தை முதலீடு செய்துவிட்டால், இதில், மாத வருமானமாக ரூ.9,250 கிடைக்கும். இதில், தம்பதியராக சேர்ந்தே முதலீடு செய்யலாம்... இருவரும் சேர்ந்து ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யும்போது, மாதந்தோறும் அதே வருமானத்தை பெறலாம். குறைந்தபட்சமாக ரூ.1000 டெபாசிட் செய்து இந்த திட்டத்தில் இணையலாம். முதிர்வு காலத்திற்குப் பிறகு, அசல் தொகையையும் நீங்கள் திரும்பப் பெறலாம்.
மாத வருமானம்: இந்த திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மற்ற வங்கித் திட்டங்களுக்கு ஒப்பிடும்போது சிறந்த வருமானத்தை இந்த திட்டம் வழங்குகிறது. நிலையான வைப்பு (FDs) போன்ற பிற நிலையான வருமான ஆதாரங்களை விட அதிக வட்டி விகிதமாகும். நிலையான வைப்பு போன்ற பிற நிலையான வருமான திட்டங்களை விட மாதந்திர வருமான திட்டத்திற்கு அதிக வட்டி விகிதம் கிடைக்கிறது. அத்துடன் உறுதியான வருமானமும் உள்ளது.
தபால் அலுவலக மாதந்திர வருமான திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடங்களாகும். இதனை 15 வருடங்கள் நீட்டிக்க முடியும்.... முன்கூட்டியே கணக்கை மூடவும் முடியும்.. ஒரு வருடம் கழித்து பணத்தை எடுக்கவும் முடியும்.. ஆனால், 3 வருடங்களுக்குள் பணத்தை எடுத்தால் முதலீட்டு தொகையிலிருந்து 2 சதவிகிதம் அபராதமாக செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1 சதவீத விலக்குடன் பணத்தைப் பெறுவீர்கள்.
நிரந்தர வருமானம்: இந்த மாதாந்திர வருமான திட்டம், நிரந்தரமான வருமானம் தேவைப்படும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், உறுதியான வருமானமும் உள்ளதால், வாடிக்கையாளர்களின் அபிமானத்தை இந்த திட்டம் பெற்றுவருகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications