எல்லா தப்பும் நீங்க தான் பண்ணீங்க! நைசாக கழண்டு கொண்ட ஓபிஎஸ்! வசமாய் சிக்கிய சசிகலா! அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சசிகலாவுடன் கைகோர்க்கலாம் என திட்டமிட்டிருந்த ஓபிஎஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கிய தர்மயுத்தத்தில் வைத்த முக்கிய கோரிக்கையான விசாரணை ஆணையம் மூலம் தற்போது சசிகலாவையே சிக்க வைத்திருக்கிறார். அடுத்தடுத்து விசாரணை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சசிகலாவுடன் கரம் கோர்ப்பாரா ஓபிஎஸ் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.

இதனையடுத்து தர்மயுத்தம் தொடங்கினார் ஓபிஎஸ். இது அதிமுக சந்தித்த இரண்டாவது அதிகார தர்மயுத்தம். இதனையடுத்து பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுக பிரிந்தது.

 சசிகலா

சசிகலா

இதற்கிடையே சசிகலா ஊழல் வழக்கில் சிறை சென்ற நிலையில் காட்சிகள் மாறியது. சசிகலாவால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதன்பின்னர் சசிகலாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க தொடங்கினார். தொடர்ந்து 4 ஆண்டுகள் ஆட்சியிலும் கட்சியிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் இணைந்து செயல்பட்டார்.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம்

அப்போது அவர் வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென்பது. இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களாக அதிமுகவில் நடைபெற்ற குழப்பங்களின் போது ஓபிஎஸ் சசிகலா ஆதரவை வெளிப்படையாகவே கேட்ட நிலையில், ஒபிஎஸ் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. மேலும் தர்ம யுத்தம் நடந்த போது நேரடியாக சசிகலாவை எதிர்த்தவர் ஓ பன்னீர்செல்வம். எனவே அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்காக அவருக்கு சசிகலா ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஆறுமுகசாமி ஆணையத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டவரும் ஓபிஎஸ் தான். அவரது கோரிக்கையின்படி தான் அதிமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டார். தற்போது தமிழக சட்டசபையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சசிகலாவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே அவர் தான் என்பது போல அறிக்கை இருப்பதாக ஜெ.ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

சந்திப்பு சாத்தியமா?

சந்திப்பு சாத்தியமா?

எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவு வேண்டி சசிகலா டிடிவி தினகரன் ஆகியோருக்கு தூது விட்ட நிலையில் இப்போது சசிகலாவுக்கு எதிராக வந்திருக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தால் இருவரும் சந்தித்து பேசுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த காலங்களில் ஓபிஎஸ் சசிகலா ஆதரவு தெரிவிக்காத நிலையில், தற்போது எல்லா விவகாரத்திற்கும் ஓபிஎஸ் தான் காரணம் என்பதால் அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் இதன் காரணமாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு அவர் ஆதரவு தெரிவிப்பது அரிதிலும் அரிது என்கின்றனர் சசிகலா ஆதரவு வட்டத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+