சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த அதிரடி.. அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பிடிஆர்

Google Oneindia Tamil News

சென்னை: அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீட்டினை 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று பல்வேறு துறைகள் தொடர்பாக அறிவிப்பு மழை பொழிந்த வண்ணமுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யும் என்பதும் அப்படியான ஒரு அறிவிப்பாகும்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

 'ஸ்ட்ரிக்ட் ஆக்ஷன்..'அண்ணாத்த கட் அவுட்டுக்கு ஆட்டை பலி கொடுத்த விவகாரம்:கமல் கட்சி நிர்வாகி புகார் 'ஸ்ட்ரிக்ட் ஆக்ஷன்..'அண்ணாத்த கட் அவுட்டுக்கு ஆட்டை பலி கொடுத்த விவகாரம்:கமல் கட்சி நிர்வாகி புகார்

தமிழ் மொழி

தமிழ் மொழி

அதில் மிக முக்கியமாக, போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற அறிவிப்பு ஒன்றாகும். தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணிகள் அனைத்திலும், தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, Tnpsc யால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

40 சதவீதம்

40 சதவீதம்

அது மட்டுமல்லாமல்.. அரசு நேரடி பணி நியமனங்களில் தற்போது மகளிருக்கு 30 சதவிகிதமாக உள்ள இட ஒதுக்கீடு இனி 40 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை உணர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான சட்டத்திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

பாலின சமத்துவம்

பாலின சமத்துவம்

மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியமானது என்பதை உணர்ந்து நேரடி பணி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சதவீதம் ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த புதிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று, அமைச்சரின் இந்த அறிவிப்பு தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனரகமும் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

கருணாநிதி ஆரம்பித்த திட்டம்

கருணாநிதி ஆரம்பித்த திட்டம்

1990ல் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிர்க்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசால் கொண்டுவரப்பட்டது. அதேபோல, ஆரம்பப்பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பதவிகளில் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இப்போது, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

English summary
Minister PTR Palanivel Thiagarajan told the Tamil Nadu assembly today that the quota for women in government appointments would be raised to 40 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X