கமலுக்கு வர்மக்கலை கற்றுத்தந்தவர்! யார் இந்த ரியல் ‘இந்தியன்’ தாத்தா ஆசான் ராஜேந்திரன்?
சென்னை: வர்மக்கலை பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை எடுத்துள்ளதாக முதல் பாகத்தில் கமல்ஹாசனுக்கு பணியாற்றிய ஆசான் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் 1996இல் வெளியான திரைப்படம் 'இந்தியன்'. அந்தப் படத்தில் கமல்ஹாசன் புதியதாக இந்தியன் தாத்தா வேடத்தில் நடித்திருந்தது திரை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக கமல்ஹாசனின் மேக் அப் மிகவும் பேசப்பட்டது. அதற்காகப் படக்குழு பல புதிய முயற்சிகளை எடுத்திருந்தது. ஆகவே, அந்தப் படம் கதை அடிப்படையிலும் வசூல் அடிப்படையிலும் சூப்பர் ஹிட் ஆனது.

அந்த வெற்றியை மனதில் வைத்துத்தான் 28 ஆண்டுகள் கழித்து ஷங்கர் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். இப்போது திரையில் ஓடிக்கொண்டுள்ள இந்தப் படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 'இந்தியன்' முதல் பாகத்தில் வர்மக்கலையை கமல்ஹாசனுக்கு கற்றுக் கொடுத்த ஆசான் ராஜேந்திரன் ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அந்தக் காலத்தில் தான் படத்திற்கு எந்த வகையில் உதவியாக இருந்தேன் என்பது பற்றியும் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் பேசி இருக்கிறார்.
குறிப்பாக 'இந்தியன்2' படத்தில் வர்மக்கலை பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லாமல் படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார். ஆசான் ராஜேந்திரன் பேசும்போது, "நமது முன்னோர்கள் வர்மக் கலைபற்றிய நுணுக்கங்களை ஓலைச்சுவடிகளில்தான் எழுதி வைத்திருந்தனர். அப்படி எழுதி வைத்த ஓலைச்சுவடி மட்கி உடையும்போது அதை அப்படியே வேறு சுவடிக்கு மாற்றி எழுதுவார்கள். அதற்குப் படி எடுப்பது என்று பெயர். அப்படிப் பார்த்து எழுதும்போது அப்படியே வரிக்கு வரி எழுத வேண்டும். சில நேரங்களில் சில வரிகளை விட்டுவிட்டுப் படி எடுப்பதும் நடக்கலாம். ஆகவே, ஓலைச்சுவடியில் உள்ளவை அனைத்தும் அப்படியே ஒரிஜினல் அல்ல. அது காலங்காலமாக மாற்றி மாற்றி எழுதப்பட்ட பிரதிகள்தான். அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச் சுவடிகளைப் படிக்கத் தெரியாதவர்கள் மற்றவர்கள் படித்துச் சொல்வதைக் கேட்டு அப்படியே மனப்பாடம் பண்ணிக் கொள்வார்கள். அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்கள். இது இரண்டாவது முறை. அடுத்து முறையாக ஆசான் மூலம் பயிற்சி பெறுவது. இதுவே மூன்றாவது முறை. இதில்தான் நேரடி அனுபவம், சில நுணுக்கங்களைக் கற்க முடியும். தமிழ்நாட்டில் உள்ளதைப் போல கேரளா, கர்நாடகா, வடமாநிலம் என சில இடங்களில் இந்தக் கலை உள்ளது. ஆனால், அது தற்காப்புக் கலையாக இல்லை. மருத்துவ முறையாகவே உள்ளது. நம் மாநிலத்தில்தான் இது தற்காப்புக் கலையாக உள்ளது.
இந்தியன் 2வில் காட்டுவதைப் போல ஒருவரை வர்மக் கலையைப் பயன்படுத்தி பெண்ணாக மாற்றுவது, குதிரையைப் போல ஓடவைப்பது எல்லாம் செய்ய முடியாது. அது தவறாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒருவரை மயக்கம் போட வைக்கலாம். கை கால்களைச் செயலிழக்க வைக்கலாம். ஒருவரை சில மணிநேரங்கள் செயல்படவிடாமல் முடக்கி வைக்கலாம். மரணம் கூட அடைய வைக்கலாம். ஆனால் குதிரைப் போல ஓடவைப்பது எல்லாம் நிஜத்தில் இல்லை. சினிமாவில் மட்டுமே உண்டு. இப்படி ஒரு உன்னதமாகக் கலையைக் கட்டுவது ஏதோ கேலி செய்வதைப் போலத்தான் உள்ளது.
ஒருவரை சித்தம் கலைய வைக்கலாம். பைத்தியம் போலச் சுயநினைவு இல்லாமல் சுற்ற வைக்கலாம். ஒருவரை வர்மக் கலையால் நாள் முழுக்க பாடவைப்பது எல்லாம் சுத்தப் பொய். வர்மக் கலைக்கு என்று சில குறி குணங்கள் உள்ளன. அதை மாற்றிச் சொல்வது தவறு. அந்தக் கலைக்குச் செய்கின்ற அவமரியாதை. இந்தப் படத்தை 20 ஆண்டுகள் கழித்து எடுத்துள்ளார்கள். வர்மக் கலை என்றால் என்ன என்று சொல்லி இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு விழிப்புணர்வு கொடுக்கலாம். அதை நான் வரவேற்கிறேன்.
யாரும் இந்தக் கலை பற்றி படம் எடுப்பதில்லை. எல்லாம் காதல் படங்கள்தான் எடுக்கிறார்கள். எனவே இந்த முயற்சி சரியானது. அதன் நோக்கமும் சரியானதாக இருக்க வேண்டும். இவர்கள் படத்தில் தவறான காட்சி ஒன்றை வைப்பதன் மூலம் நாளை வர்மக் கலை கற்க வருபவர்கள் அதைச் செய்து காட்டு என்பார்கள். இல்லாத ஒன்றை எப்படிச் செய்ய முடியும்?
ஏடுகளில் உள்ள முறை, அல்லது அகஸ்தியர் சொன்னதைத் தாண்டி பல சூத்திரங்களை நான் நடைமுறையில் புதியதாகப் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு இந்தத் துறையில் பயிற்சி இருக்கிறது. அப்படியான நான் இந்தியன் 2 படத்தைப் பார்க்கும்போது அதில் ஆராய்ச்சி செய்யாமல் படத்தை மேலோட்டமாக எடுத்துள்ளார்கள்.என அறியும்போது, அது வருத்தம் அளிக்கிறது" என்றவர் 'இந்தியன்' முதல் பாகத்தில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றியும் கூறியுள்ளார்.
"நான் நிறைய வர்மக்கலை பற்றி புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். இந்தியன் முதல் பாகத்தில் வர்மக்கலை பற்றித்தான் கதையில் முக்கியத்துவமே இருக்கும். ஆகவே, உண்மையான வர்ம கலைஞரை அவர் தேடி இருக்கிறார். பலரும் வைத்தியர்களாகக் கிடைத்துள்ளனர். அவர்களுக்குச் செயல்முறையில் வர்மக்கலை தெரியாது. அப்போதுதான் என் புத்தகங்கள் படித்து என்னை ஷங்கர் அழைத்தார். போய் பார்த்தேன். அவர் இந்தியன் தாத்தா கதையைச் சொன்னார். சில முத்திரைகளைச் செய்து காட்ட சொன்னார். நான் ஒற்றை காலை தூக்கித் தாக்குவதைப் போல செய்து காட்டினேன். அதைத்தான் கமல் படத்தில் செய்திருப்பார். அவருக்கு நான் செய்தது திருப்தி அளித்தது. அவருக்குப் பிறகு எழுத்தாளர் சுஜாதா என்னை நேர்முகம் செய்தார்.
அவருக்கு வர்மக்கலை ரீதியாக சில விளக்கங்கள் கொடுத்தேன். அதற்கு அறிவியல் ரீதியான விளக்கத் தேவை என்றார். நான் சொன்னேன். அது அவருக்கு மனநிறைவாக இருந்தது. அதன்பின்னர் கமல்ஹாசனுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் கற்றுக் கொடுத்தேன். இரண்டு விரல் மடக்கிச் செய்யும் முத்திரையை நான் தான் அவருக்குச் சொல்லிக் கொடுத்தேன். அப்போது அவருக்குக் காலில் விபத்து நடந்திருந்தது. அதைச் சமாளித்து சில காட்சிகளில் நடித்தார்" என்கிறார்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications