ஜன.27தான் ரியல் பொங்கல்.. ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழக்கு! தீர்ப்பு தேதி அறிவிப்பு
சென்னை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததால், பொங்கலுக்கு வெளியாக இருந்த இந்த திரைப்படம் இன்னும் வெளியாகமல் இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து படக்குழு நீதிமன்றத்தை நாடியிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜன.27 தீர்ப்பு வழங்குவதாக கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது அனைத்து வாதங்களும் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து ஜன.27ல் தீர்ப்பு வெளியாகும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கு என்ன?
எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில், கேவிஎன் புரொடக்சன் தயாரிப்பில் உருவானதுதான் ஜனநாயகன் திரைப்படம். இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால்.. எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே பொங்கலுக்கு திட்டமிட்டபடி திரைப்படம் வெளியாகவில்லை. திரைப்படத்தில் வன்முறைகள் இருக்கிறது எனில் அதற்கேற்ப சான்றிதழ் கொடுக்க வேண்டும். ஆனால் அப்படி என்ன சான்றிதழும் கொடுக்கப்படவில்லை.
மறு ஆய்வு
எனவே சான்றிதழ் கோரி நீதிமன்றத்தை நாடியது படக்குழு. உச்சநீதிமன்றத்திற்கு கேவிஎன் புரொடக்சன் சென்றபோது.. உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தை நாட.. நீதிபதி பி.டி.ஆஷா வழக்கை விசாரித்தார். விசாரணையில், படத்தை மறு ஆய்வு குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத்தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை
இருப்பினும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இது இரண்டும் கே.வி.என் புரொடக்ஷனுக்கு பாசிட்டிவாக அமைந்தது. இதனை அடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தணிக்கை குழு
அப்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான.. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மதம் சார்ந்த மற்றும் பாதுகாப்பு சின்னங்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். இதற்காக தணிக்கை குழுவில் இடம் பெற்ற நபர் புகார் அளித்தார் என்றும் சொலிசிட்டர் கூறினார்.
படம் வெளியாக வேண்டும்
எனவே அதன் அடிப்படையில், தணிக்கை வாரியத் தலைவர் திரைப்படத்தை மறு ஆய்வு குழு பார்வைக்கு அனுப்ப முடிவெடுத்தார். ஆனால், அந்த முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தாக்கல் செய்யவில்லை. தங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரியே 6 தேதி மனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த தனி நீதிபதி.. ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அடுத்த நாளான 7ம் தேதி, ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
உத்தர பிறப்பிக்க முடியாது
தணிக்கை வாரியம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய, கால அவகாசம் வழங்காமல் தணிக்கை வாரிய தலைவரின் முடிவை ரத்து செய்தது தனி நீதிபதி அமர்வு. எனவே, தணிக்கை வாரியத் தலைவரின் முடிவுக்கு எதிராக.. மனுவில் கோரிக்கை வைக்காத போது.. அதில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று வாதங்களை முன்வைத்தார்.
தீர்ப்பு எப்போது?
ஆனால் கே.வி.என் புரொடக்ஷன் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர், இந்த திரைப்படம் ரூ. 500 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தை பார்த்த 5 பேரில் ஒருவர் மட்டுமே ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார். அதற்காக தணிக்கை வாரிய தலைவர், திரைப்படத்தை மறு ஆய்வு அனுப்ப முடியாது என்று வாதங்களை முன்வைத்தார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி.. வழக்கின் தீர்ப்பை ஜனவரி 27ஆம் தேதி வழங்குவதாக கூறியுள்ளார்.
ஜனவரி 27ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பை வழங்குகிறது. இதனையடுத்து படம் வெற்றிகரமாக திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications