"கலைகிறது மவுனம்".. 5 பேரில் மூவர் யார்.. விடமாட்டோம், புரட்சி நடந்தே தீரும்.. பாமக பாலு சொல்வது என்ன?
பாமக வழக்கறிஞர் பாலு நம் ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்
சென்னை: இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கான புரட்சி நடந்தே தீரும் என்று பாமகவின் வழக்கறிஞர் பாலு திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு வந்ததுமே முதல்நபராக கருத்தை பதிவு செய்த பாமக "நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரானது" என்று காட்டமாக கூறியிருந்தது.. இந்நிலையில், பாமக வழக்கறிஞர் பாலு, நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்ன கருத்துக்கள் இதுதான்:

50% லிமிட்
"ஒரு ஆணையம் பரிந்துரைக்காத, 10 சதவீத முன்னேறிய சமுதாயத்தில் பின்தங்கிய ஏழைகள் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரமே இல்லாத சட்டத்திருத்தத்தை, உச்சநீதிமன்றம் எப்படி ஏற்றுக் கொண்டது? 50 சதவீத விழுக்காட்டை தாண்டக்கூடாது என்ற நிபந்தனை ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிறது.. அதை மீண்டும் உறுதி செய்தது எது என்றால், மண்டல் வழக்கு, 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு போன்றவைகள்தான்.. 9 நீதிபதிகளை கொண்ட முடிவினை, ஏற்கனவே எடுத்துவிட்டு, தற்போது அதை மீறலாம் என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு எப்படி உத்தரவை பிறப்பிக்க முடியும்?

லிஸ்ட் எடுங்க
இதெல்லாம் நீதிபதியாக, வழக்கறிஞராக, நீதித்துறையில் கவனிக்கக்கூடியவர்களுக்கு நன்கு நேரடியாக தெரியக்கூடிய முரண்பாடு.. இதை இன்றைக்கு சுப்ரீம் கோர்ட் நிறைவேற்றியுள்ளது.. ஒருவேளை, முன்னேறிய சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு தரவேண்டும் என்று சொன்னால், பொருளாதாரத்தில் பின்தங்கிய எல்லாருக்குமே தர வேண்டும்.. இல்லாவிட்டால், முன்னேறிய சமூகத்திற்கும் இடஒதுக்கீடு தருகிறோம் என்று சொன்னால், சாதிவாரிய கணக்கெடுப்பை நடத்துங்கள்.. எத்தனை சதவீதம் முன்னேறியவர்கள் உள்ளார்கள்? எத்தனை சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளார்கள் என்பதை விகிதாச்சார அடிப்படையில் எல்லாருக்குமே தந்தீர்கள் என்றால் அது ஏற்புடையதாக இருக்கும்..

மவுனம் கலைகிறது
எப்படி முதல் அரசியல் சட்டதிருத்தம், தந்தை பெரியார் அவர்களால் செண்பகம் துரைராஜன் வழக்கிற்கு பிறகு மாபெரும் புரட்சியாக இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு என்பதை வழங்கித்தான் ஆக வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு 1961-ல் கொண்டுவந்தாரோ, அதுபோல், இடஒதுக்கீட்டிற்கான மாபெரும் புரட்சி, இந்தியா முழுவதும் நடைபெறத்தான் போகிறது.. இன்றைய இளைய சமுதாயத்திற்கு இதுகுறித்த புரிதல் இல்லாமல், அடிப்படை புரிதலும் இல்லாமல் உள்ளனர்.. அவர்களின் மவுனம் கலைக்கப்பட்டு, பெரும் புரட்சி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உருவெடுக்கும்.. முழுமையான இடஒதுக்கீடு கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற நிலை, மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் நிச்சயம் வரும்.

புள்ளிவிவரம்
69 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு இதே உச்சநீதிமன்றத்தில் அன்று வந்தபோது, சமகால துல்லியமான கணக்கெடுப்பு என்ன? என்று கேட்டார்கள்.. அதேபோல 10.5 சதவீத வழக்கிலும் புள்ளிவிவரம் கேட்டார்கள்.. ஆனால், இன்று நீதிபதிகளோ, அதை பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.. மத்திய அரசு எத்தகைய இடஒதுக்கீட்டை விரும்பினாலும் கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள்... என்னிடம் ஒரு மூத்த வழக்கறிஞர் சொல்லும்போது, "மண்டல் வழக்கில் இதுபோலவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய சமூகத்திற்கு இடஒதுக்கீடு குறித்த வாதம் முன்வைக்கப்பட்டபோது, இதற்கான வழிமுறைகள் அரசியல் சாசனத்தில் இல்லை, அதைபற்றி வாதிக்க முடியாது என்று நீதிபதிகள் அப்போது சொன்னார்களாம். அந்த தடை இப்போது நீக்கப்பட்டுள்ளதாம்.

ஷரத்து எங்கே
அன்றைய தினம் அப்படி ஒரு விதிகளே இல்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்களே தவிர, அத்தகைய விதிகளை உருவாக்குங்கள் என்று சொல்லவில்லை.. ஆனால், ஒரு விதியை, ஒரு ஷரத்தை, அரசியல் சாசனத்தினுள் திணிக்கின்றபோது, அல்லது சேர்க்கின்றபோது அல்லது நீக்குகின்றபோது, அரசியல் அமைப்பு சட்டத்தினுடைய கோட்பாடுகள் மீறாமல் இருக்கிறதா என்பதுதான், உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.. அந்த வகையில் உச்சநீதிமன்றம் தன் கடமையை செய்ய தவறியிருக்கிறது. சமூகநீதி தொடர்பான வழக்குகளை பார்க்கும் எங்களை போன்றோருக்கெல்லாம் இது பெரும் மனக்கொதிப்பு, அதிர்ச்சியை தருகிறது.

சமகுரல்
ஆனால், இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்கனவே கணித்திருந்தோம்.. காரணம், 5 நீதிபதிகளில் 3 பேர் முன்னேறிய வகுப்பை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.. ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் மட்டும் போதாது, அந்த தீர்ப்பின் நீதி வழங்கப்பட்டுவிட்டதாக மக்கள் உணர வேண்டும்.. ஆக, உச்சநீதிமன்றத்திலும் சரி, உயர்நீதிமன்றத்திலும் சரி, நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி வேண்டும் என்று நாங்கள் எல்லாரும் குரல் கொடுக்கிறபோது, யாரும் அதை அப்போது பெரிதுபடுத்தவேயில்லை..

கறார் பாலு
ஆகவே, இதுபோன்ற இக்கட்டான சூழலில், மிகவும் முக்கியமான சந்தர்ப்பங்களில்தான், பெரும் பின்னடைவை, பிற்படுத்தப்பட்ட மக்கள் சந்திக்க நேரிடும்.. அதனால் இந்த தீர்ப்பை நிரந்தரமானதாக நாங்கள் பார்க்கவில்லை. மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.. இந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும்.. உரிய அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டு, மக்கள் விகிதாச்சார அடிப்படையில் அனைவருக்கும் சமூக நீதி கிடைக்கக்கூடிய வகையில், இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும்.. அதற்காக நாங்கள் போராடுவோம்" என்றார் பாமக பாலு.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications