கண்ணீர் விட்டு அழும் மாணவிகள்.. நெருக்கடியில் நடிகர் தாமு.. அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு செக்
சென்னை: பள்ளிகளில் நடிகர் தாமு பேசுவதும், மாணவர்கள் அழும் காட்சிகளும் சமீப நாட்களாக சோஷியல் மீடியாவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், தாமுவை வைத்து நிகழ்ச்சிகள் நடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
நடிகர் தாமு, மாணவர்கள் மத்தியில் நேர்மறை எண்ணத்தை உருவாக்கவதாக கூறி கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய அமைப்புதான் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவை (IPTSA). இந்த அமைப்பில் 1 லட்சம் பேராசிரியர்களும், 30 லட்சம் பெற்றோர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அமைப்பின் மூலம் தரமான மாணவர்களை உருவாக்குவதாக கூறி, தாமு அவர்கள் மத்தியில் தொடர்ந்து பேசி வருகிறார்.

இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் அவர் டிரெய்னிங் எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் சமீப நாட்களாக அவருடைய பேச்சை கேட்டு மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக மாணவர்களுக்கு குற்ற உணர்வை தூண்டி அதன் மூலம் அழ வைக்கிறார் என்கிற குற்றச்சாட்டு வலுவாக எழுப்பப்பட்டிருக்கிறது.
இது குறித்து உளவில் நிபுணர்கள் கூறுகையில், "மாணவர்களை போதை பழக்கத்திலிருந்து மீட்பதற்காகவும், தவறான பாதையில் செல்லாமல் தவிர்ப்பதற்காகவும் தான் பேசுவதாக நடிகர் தாமு கூறுகிறார். ஆனால் உண்மையில் ஒரு மாணவனை போதை பழக்கங்களிலிருந்து மீட்பது என்பது பெரிய பணி. அது தாமுவின் 45 நிமிட பேச்சால் மாறிவிடாது. பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர், பெற்றோர், சகோதர சகோதரிகள், மாவட்ட நிர்வாகம் என அனைவரின் பங்கும் இதில் இருக்கிறது.
ஆனால் தாமு தனது 45 நிமிட பேச்சால் பலரையும் மாற்றிவிடுவதாக கூறுகிறார். அதெப்படி முடியும்? ஒரு மாணவனை நல்வழிப்படுத்த அவரது குற்ற உணர்வை தூண்டும்போது, அந்த நேரத்திற்கு மட்டும் அம்மாணவர் சரியான முறையில் இருக்க முயற்சிப்பார். ஆனால் இதற்கு முன்னர் செய்த செயல்கள் இந்த குற்ற உணர்வை மீறி வந்து, 'அட போடா இனி இப்படி எல்லாம் இருக்க முடியாது' என்கிற நிலைக்கு அவரை தள்ளிவிடும். எனவே அம்மாணவன் இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிடுவார்" என்று எச்சரித்துள்ளனர்.
இப்படி தொடர் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தாமுவை வைத்து நிகழ்ச்சிகள் நடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் அறிவொளி, பிபிசி தமிழ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
"நடிகர் தாமு அரசுப் பள்ளிகளுக்குள் வந்து மாணவர்களிடம் பேசுவதற்கு பள்ளிக் கல்வித்துறையிடம் முறையாக அனுமதி வாங்கப்படவில்லை. அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளேன். இதன்பிறகு நடிகர் தாமுவை அழைத்து அரசுப்பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்று அறிவொளி தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களிடம் யாரை அழைத்து பேச வைக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்வதற்கு தெளிவான விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளை ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை. நிறைய ஆசிரியர்களுக்கு அவ்வாறு விதிகள் இருப்பதே தெரியாது. பள்ளி மாணவர்களிடம் பேசுபவர்கள் தேர்ந்த எழுத்தாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் இருக்கவேண்டும் என 40 வருடங்களுக்கு முன்பே விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. காவல்துறை அதிகாரிகள் பள்ளி மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால், காவல்துறை பள்ளி மாணவர்களிடம் யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது" என்று கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications