இனி தாம்பரம் மட்டுமல்ல.. பல்லாவரம், சோழிங்கநல்லூரிலும்.. தமிழ்நாடு மின்சார வாரியம் மேஜர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் மின்சார கோட்டம் தாம்பரம், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 3 கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோட்டங்களுக்கும் தனித்தனியாக அலுவலகங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. எந்த ஊர் எந்த கோட்டத்தில் வரும் என்பதை பார்ப்போம்.

சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் மின்கோட்டம் மிகப்பெரியது ஆகும். சென்னையில் மடிப்பாக்கத்திற்கு அடுத்துள்ள பகுதிகள்,விமான நிலையத்தை தாண்டி உள்ள பகுதிகள் அந்த பக்கம் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட ஓஎம்ஆர், ஐடி காரிடர் சாலைகளின் பல பகுதிகள் தாம்பரம் கோட்டத்தில் தான் வரும். சென்னை மற்றும் தாம்பரம் பகுதியில் மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது மற்ற ஊர்களை போல் காலை முதல் மாலை வரை மின்சாரத்தை ரத்து செய்யாது. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 2 மணிக்குள் முடித்துவிடும். அதுவும் பகுதி பகுதியாகவே பணிகள் மேற்கொள்ளப்படும்.

The Tambaram power line is divided into 3 lines namely Tambaram, Pallavaram and Sholinganallur

தற்போது தாம்பரம் மின் கோட்டம் மிகப்பெரியதாக உள்ள நிலையில், அதனை 3 ஆக பிரித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் என 3 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஊர் எந்த கோட்டத்தில் வரும் என்பதை பார்ப்போம்

அதன்படி தாம்பரம் உபகோட்டத்தில் தாம்பரம் மேற்கு, முடிச்சூர் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய பிரிவு அலுவலகங்களும், சேலையூர் உபகோட்டத்தில் இரும்புலியூர், தாம்பரம் கிழக்கு, சிட்லப்பாக்கம், சேலையூர் மற்றும் மாடம்பாக்கம் ஆகிய பிரிவு அலுவலகங்களும், செம்பாக்கம் உபகோட்டத்தில் செம்பாக்கம், நேரு நகர் மற்றும் கடப்பேரி அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம் கோட்டத்தில் பல்லாவரம் உப கோட்டத்துக்கு கீழ்கட்டளை, பல்லாவரம் கிழக்கு மற்றும் பல்லாவரம் மேற்கு ஆகிய பிரிவு அலுவலகங்களும், பம்மல் உபகோட்டத்துடன் பம்மல், அனாகாபுத்தூர், பொழிச்சலூர் மற்றும் குரோம்பேட்டை ஆகிய பிரிவு அலுவலகங்களும், ராதா நகர் (கடப்பேரி) உப கோட்டத்துக்கு ராதா நகர், நியூ காலனி மற்றும் அஸ்தினாபுரம் ஆகிய பிரிவு அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூர் கோட்டத்தில் மேடவாக்கம் உபகோட்டத்துக்கு மேடவாக்கம், புதிதாக பிரிக்கப்பட்ட நன்மங்கலம், ஜல்லடியான் பேட்டை மற்றும் கவுரிவாக்கம் ஆகிய பிரிவு அலுவலகங்களும், பள்ளிக்கரணை உப கோட்டத்துக்கு (புதிய உபகோட்டம்) கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூர் (புதிய பிரிவு) (எஸ். கொளத்தூர்), பள்ளிக்கரணை மற்றும் நாராயணபுரம் (புதிய பிரிவு) ஆகிய பிரிவு அலுவலகங்களும், சிட்லபாக்கம் உப கோட்டத்தில் சிட்லபாக்கம் அரசன்கலனி (புதிய பிரிவு) மற்றும் பெரும்பாக்கம் (புதிய பிரிவு) ஆகிய பிரிவு அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளது என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+