மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த புதிய பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா அமைச்சரானதால் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு விவரம் வருமாறு;
அ) கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு ஆர். காந்தி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.

திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு அர. சக்கரபாணி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
இ) மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருந்த திரு சிவ. வீ. மெய்யநாதன், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார். ஈ) திரு எஸ். ரகுபதி, மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (District Monitoring Officers) மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே தஞ்சைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ், சேலத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு, கோவைக்கு செந்தில்பாலாஜி, நெல்லைக்கு ராஜகண்ணப்பன், ராமநாதபுரத்துக்கு தங்கம் தென்னரசு, தென்காசிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்., என பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications