Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானிலை கணிப்பில் துல்லியம்! நிர்மலா சீதாராமனுக்கு தமிழக அரசு பதிலடி! புதுசா 2 டாப்ளர் ரேடார் வருது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இயற்கை பேரிடரை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க புதியதாக 2 டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் அறிவித்திருக்கிறார். வானிலை கணிப்பு குறித்த தமிழக அரசின் கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக விளக்கமளித்திருந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதம் என்பது பேரிடர் மாதமாகவே அமைந்து விடுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை உள்ளிட்ட 4 வட மாவட்டங்களை கடுமையாக தாக்கிய மிக்ஜாம் புயல் ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியது. அதேபோல தென் மாவட்டங்களை தாக்கிய மழை வெள்ளமும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இவை இரண்டையும், துல்லியமான வானிலை முன் கணிப்பு இருந்திருந்தால் சிறப்பாக எதிர்கொண்டிருக்கலாம் என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.

The Tamil Nadu government has responded to Nirmala Sitharaman by saying that 2 new Doppler radars will be set up

மிக்ஜாம் புயலை பொறுத்த அளவில், 'புயல் சென்னையையொட்டி வந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் கரையை கடக்கும். இந்த நேரத்தில் அதீத கனமழை இருக்கும்' என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால், புயல் சென்னையை நோக்கி வந்தபோது நடந்ததே வேறு. மிக்ஜாம் புயல் இதற்கு முன்னர் சென்னையை தாக்கிய மாண்டஸ் உள்ளிட்ட புயலிலிருந்து வேறுபட்டதாக இருந்திருக்கிறது.

அதாவது, வழக்கமாக புயல்கள் மணிக்கு 10-18 கி.மீ வேகத்தில் நகரும். ஆனால், சென்னைக்கு சுமார் 90 கி.மீ அருகில் நிலைகொண்டிருந்த மிக்ஜாம் வெறும் 5 கி.மீ வேகத்தில்தான் நகர்ந்தது. இதனால் மழையின் அளவு கடுமையாக அதிகரித்தது. சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களையும் இந்த மழை பதம் பார்த்தது. மறுபுறம், புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் இருந்ததால், கூவம், அடையாறு உள்ளிட்ட வடிகால் ஆறுகளில் பாய்ந்த வெள்ள நீரை கடல் உள்வாங்கவில்லை.

இவை இரண்டும்தான் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட காரணமாகும். புயலின் வேகத்தை முன்கூட்டியே கணித்திருந்தால் வெள்ள பாதிப்புகளை ஓரளவுக்கு தடுத்திருக்க முடியும் என தமிழக அரசு கூறியிருந்தது.

மிக்ஜாம் தாக்கி கொஞ்ச நாட்களுக்குள் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தீவிரமான மழை, வெள்ளம் அசைத்து பார்த்துவிட்டது.

டிசம்பர் மாதம் இறுதியில் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால், ஒரே நாளில் சுமார் 95 செ.மீ அளவுக்கு மழை பெய்தது. இது ஓராண்டின் சராசரி மழையின் அளவாகும். ஓர் ஆண்டுக்கான மழை ஒரே நாளில் பெய்ததன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின.

குறிப்பாக தூத்துக்குடியில் ஏரல், சம்படி, இடையற்காடு, தலையாபுரம், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளும் திருநெல்வேலியில் வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், சமாதானபுரம், பாளையங்கோட்டை மார்க்கெட் ஆகிய பகுதிகளும் வெள்ளத்தால் உயிரிழப்புகளையும், பொருள் இழப்புகளையும் எதிர்கொண்டது. இந்த பேரிடரின்போதும் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு துல்லியமாக இல்லாது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.

மத்திய அரசு இந்த விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவித்தாலும், தமிழக அரசு இதில் உறுதியாக இருந்தது. இந்நிலையில் இன்றைய பட்ஜெட் உரையில், வானிலை மாற்றங்களையும், பேரிடர்களையும் முன்கூட்டியே துல்லியமாக கணிக்க புதியதாக 2 டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இவை ராமநாதபுரம் மற்றும் ஏற்காடு பகுதிகளில் ரூ.56 கோடியில் அமைக்கப்படும்.

வானிலை கணிப்பு குறித்து தமிழக அரசின் விமர்சனங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி பதிலளித்திருந்த நிர்மலா சீதாராமன், "இன்ச் பை இன்ச் எவ்வளவு மழை பெய்யும் என்று சொல்ல முடியாது" என்று காட்டமாக விளக்கமளித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மழையின் அளவை துல்லியமாக கணிக்கும் வகையில் புதியதாக 2 ரேடார்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+