அடிதூள்! இதெல்லாம் வேறலெவல் மாஸ்டர்பிளான்! தமிழ்நாட்டில் 8 இடங்களில் புது துறைமுகம்.. எங்கு தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில், எட்டு புதிய சிறிய துறைமுகங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி, மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். தமிழ்நாட்டின் 1 ட்ரில்லியன் டாலர் திட்டத்திற்கு இந்த துறைமுகங்கள் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் முகையூர் மற்றும் பனையூரில் துறைமுகங்கள் அமைக்கப்படும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சிலம்பிமங்கலம் ஆகிய இடங்களிலும் துறைமுகங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுகத் திட்டத்தின் முக்கிய இடங்கள் மற்றும் முதலீடு
மயிலாடுதுறையில் வானகிரி மற்றும் நாகப்பட்டினத்தில் விழுந்தமாவடி ஆகிய இடங்களும் துறைமுகங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மனப்பாடு மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த துறைமுகங்களை அமைப்பதற்கு தனியார் முதலீட்டாளர்களை அரசு அழைத்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் மேலும் விரிவடையும். புதிய துறைமுகங்கள் அமைப்பதன் மூலம், இப்பகுதிகளில் வேலைவாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன், துறைமுகங்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். அதன் மூலம், மாநிலத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் அதிகரிக்கும்.
. தமிழ்நாட்டின் 1 ட்ரில்லியன் டாலர் திட்டத்திற்கு இந்த துறைமுகங்கள் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய துறைமுகங்கள் அமைப்பதற்கான திட்டமிடல், மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இது, அப்பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இந்த திட்டத்தின் வெற்றி, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். துறைமுகங்கள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தமிழகத்தில் எட்டு புதிய துறைமுகங்கள் அமைக்கும் திட்டம், மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். கடலூரில் பசுமை வளத்துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் போட்டுள்ளது. விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.
கடலூரில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம். விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. மத்திய பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக் கூடிய வகையில் பசுமை துறைமுகமாக இது அமைய உள்ளது.
ஆண்டுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) சரக்குகளை கையாளும் வகையில் இந்த துறைமுகத்தை அமைக்க திட்டம் போடப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கடலூர் தற்போது உள்ள துறைமுகம் சுமார் 50 ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியாருக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தொடர் மண்மேடு காரணமாக துறைமுகம் செயலிழந்தது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் (TNMB) ஏற்கனவே வடக்கு மற்றும் தெற்கு பிரேக்வாட்டரை நீட்டிப்பதற்காக ₹160 கோடி செலவிட்டுள்ளது. 1 & 2 வார்ஃப்கள் (240 மீ நீளம்) கட்டுமானம் மற்றும் சுமார் 9 மீ வரை கால்வாயை ஆழப்படுத்தும் பணிகள் நடந்தன.
கடலூர் துறைமுகம் வங்காள விரிகுடாவில் உப்பனார் மற்றும் பரவனாறு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள intermediate anchorage துறைமுகமாகும். நங்கூரம் போடும் இடம் 0.5 கடல் மைல் தொலைவில் 8-10 மீ ஆழம் உள்ளது.
துறைமுகம் தூத்துக்குடி: இது போக தூத்துக்குடியில் உள்ள விஓசி துறைமுகம் அருகே 500 மெகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலைகள் அமைக்கப்படும் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளன.அணு மின் நிலையம், அனல் மின்நிலையம் மட்டும் இன்றி புகையை வெளியேற்றாத, இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்சாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு தீவிரம் காட்டி வருகிறது. இதை மனதில் வைத்தே தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
150 கோடி ரூபாயில் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் இந்த சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு சூரிய ஒளி மின்சாரத்திலும் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி 4141 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் காற்றாலை மின்சாரத்திலும் டென்மார்க்கிற்கு இணையாக தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications