சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹாஸ்பிடலில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி வேணுமா.. ஒரே ஒரு ட்வீட் போதும்.. அசத்தும் தமிழக அரசு!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை தமிழக சுகாதாரத்துறை அறிமுகம் செய்துள்ளது.

 தடுப்பூசி 'ஸ்டாக்' இல்ல.. காலையிலேயே கிளம்பி வந்துடாதீங்க - கெஜ்ரிவால் 'அவசர' அறிவிப்பு தடுப்பூசி 'ஸ்டாக்' இல்ல.. காலையிலேயே கிளம்பி வந்துடாதீங்க - கெஜ்ரிவால் 'அவசர' அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 17,000-ஐ கடந்து விட்டது.

சென்னையில் அதிக பாதிப்பு

சென்னையில் அதிக பாதிப்பு

தினசரி உயிரிழப்பும் 100-ஐ கடந்து செல்கிறது. தலைநகர் சென்னையை கொரோனா புரட்டியெடுத்து வருகிறது. சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 4,000-ஐ கடந்து விட்டது. அம்பத்தூர், அண்ணா நகர், கிண்டி, எழும்பூர் என அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று பரவி கிடக்கிறது. சென்னையின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி ஏறக்குறைய நிரம்பி விட்டன.

மக்களின் ஆதங்கம்

மக்களின் ஆதங்கம்

இதனால் எந்த மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளது? இதை எப்படி அறிவது? என தெரியாமல் மக்கள் தவித்து வந்தனர். இது தொடர்பாக பலர் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் கொட்டி தீர்த்தனர். இந்த நிலையில் மக்களின் இந்த பிரச்சினையை தீர்க்க தமிழக சுகாதாரத்துறை பலே யோசனையை கையில் எடுத்துள்ளது. அதாவது கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது தமிழக சுகாதாரத்துறை.

ட்வீட் மூலம் அறியலாம்

ட்வீட் மூலம் அறியலாம்

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தேவைப்படுபவர்கள் @1O4GoTN என்ற ட்விட்டர் கணக்கு மூலம் அதனை தெரியப்படுத்தலாம். இந்த கோரிக்கையை கையாள ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணையம் வழியாக கட்டளை மையம் கண்காணித்து படுக்கை இருப்பை பொறுத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசுக்கு பாராட்டு

அரசுக்கு பாராட்டு

இந்த கட்டளை மையம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதியுடன் கிடைப்பதையும் உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெளிவாக சொல்வது என்றால் இந்த ட்விட்டர் கணக்கு மூலமாக மக்கள் மொத்தம் எத்தனை ஆக்சிஜன் சிலிண்டர்கள் (Oxygen Cylinder), படுக்கை வசதி பெறலாம் என்ற தகவலை பெறமுடியும். தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான காலியாக உள்ள படுக்கைகளை அறியவும் வெண்டிலேட்டர், ஆக்சிஜன் உதவி கோரவும் முடியும்.
ட்விட்டர் வசதியை பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

English summary
The Tamil Nadu Health Department has launched a Twitter account for corona patients to get bed facilities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X